உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அதிசயப் பெண்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டபீர் ஸ்வாமி

25

இதை வாசித்தவுடன் அரண்மனையிலிருந்து வந்தவர்கள் சாக்கடைப் பக்கம் போய் அதற்குள் ‘டபீர்’ என்று விழுந்த வஸ்து எதுவாயிருக்கலாமென்று தேடினார்கள்.

என்ன ஆச்சரியம்! அவர்கள் எதைத் தேடி அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தார்களோ, அந்தப் பண்டமே அதற்குள் இருந்தது. ‘அரண்மனையிலிருந்து திருடிக் கொண்டு வந்தவன் அப்போதைக்கு இங்கே போட்டு வைத்திருக்கலாம். திருட்டு விசாரணை நடந்து ஓய்ந்த பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணிப் போட்டிருக்கிறான்’ என்று ஊகித்துக்கொண்டார்கள்.

‘டபீர் என்ற சத்தம் கேட்டது’ என்ற குறிப்பு இல்லா விட்டால் திருட்டுப்போன பண்டம் கிடைத்திருக்காது என்பதை எண்ணியபோது, அந்தச் சம்பளமில்லாத உததியோகஸ்தரிடத்தில் அவர்களுக்கு அபார மதிப்பு ஏற்பட்டுவிட்டது.

அவரை அரசரிடம் உபசாரத்தோடு அழைத்துச் சென்று, திருட்டுப் போன பாத்திரம் அவரால்தான் கிடைத்தது என்று சொல்லி அவர் உத்தியோகச் சிறப்பையும் எடுத்துரைத்தார்கள். டபீர் என்ற சத்தத்தைக் கவனித்துக் குறிப்பு எழுதிய அந்தக் கனவானுக்கு ‘டபீர் ஸ்வாமி’ என்ற பட்டமும், ராஜ சன்மானமும் கிடைத்தன.

***

கதையைச் சொல்லிவிட்டு, “டபீர் ஸ்வாமியின் வரலாறு பொருத்தமாக இருக்கிறதா?” என்றார் ஸ்ரீநீவாசையர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசயப்_பெண்.pdf/27&oldid=1104941" இலிருந்து மீள்விக்கப்பட்டது