இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மிளகாய்ப் பொடியும்
ஒரு காக்கை வீதி வழியே பறந்து வந்துகொண்டிருந்தது. வீதியின் ஒரத்தில், ஒரு கிழவி இட்டிலி விற்றுக்கொண்டிருந்தாள். கூடைக்குள்ளே சில இட்டிலிகளும், மேலே இருந்த தட்டில் ஐந்தாறு இட்டிலிகளும் இருந்தன. காக்கை அந்த இட்டிலிகளைப் பார்த்தது. அதன் வாயில் நீர் ஊறியது.
கிழவி எங்கேயோ கவனம் இன்றிப் பார்த்துக் கொண்டிருந்த சமயம் பார்த்து அந்தக் காக்கை ஓர் இட்டிலியைக் கவ்வியது; உடனே வேகமாகப் பறந்து