உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அதிசயப் பெண்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இட்டிலியும் மிளகாய்ப் பொடியும்

27

போயிற்று. பாவம்! கிழவி உரக்கக் கத்தினாள் எந்த பயனும் இல்லை.

இட்டிலியைக் கவ்விக்கொண்டு வந்த காக்கை, ஊருக்கு வெளியே ஒரு மரத்தின்மேல் போய் உட்கார்ந்தது. அது வாயில் ஒர் இட்டிலியுடன் வருவதை நரி கவனித்துப் பார்த்தது. எப்படியாவது அந்த இட்டிலியை ருசி பார்க்க வேண்டும் என்ற ஆசை அதற்கும் உண்டாயிற்று.

அந்த மரத்தடிக்கு நரி விரைவாக வந்தது. மேலே உள்ள காக்கையைப் பார்த்து,"தம்பி, இந்த இட்டிலியை நீ எப்படி எடுத்துக்கொண்டு வந்தாய்? உன் சாமர்த்தியமே சாமர்த்தியம்!” என்று புகழ்ந்து பேசியது. காக்கை வாயில் கவ்விய இட்டிலியுடன் மரத்தின் மேலேயே இருந்தது.

நரி, இனிமேல் நேரே கெஞ்சிக் கேட்டுத்தான் இட்டிலியில் கொஞ்சம் வாங்கவேண்டும் என்று தெரிந்து கொண்டது. ஆகவே, “தம்பி, எனக்கு வெகு நாட்களாக இட்டிலி தின்னவேண்டும் என்று ஆசையாக இருந்தது. நான் ஊருக்குள்ளே போய் ஒன்றும் திருட முடியாதே. நண்டையும் தவளையையும் தின்று தின்று சலித்துப் போய்விட்டது. நீதான் பாக்கியசாலி. மனிதர் தின்னும் தின்பண்டங்களெல்லாம் உனக்குக் கிடைக்கின்றன” என்று நயமாகச் சொல்லத் தொடங்கியது.

அதைக் கேட்டுக்கொண்டிருந்த காக்கை தன் வாயிலிருந்த இட்டிலியை மரத்தில் இருந்த சிறிய பொந்தில் வைத்துவிட்டு, "கா கா" என்று கூவியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசயப்_பெண்.pdf/29&oldid=1482019" இலிருந்து மீள்விக்கப்பட்டது