பக்கம்:அதிசயப் பெண்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இட்டிலியும் மிளகாய்ப் பொடியும்

29

காக்கை அந்த வார்த்தைகளை உண்மையாக நம்பி, மறுபடியும் ஊரை நோக்கிப் புறப்பட்டது.

நரி சிறிது நேரம் சும்மா இருந்தது. அதனுடைய துஷ்ட குணம் அதைச் சும்மா இருக்க விடவில்லே. அந்த இட்டிலிக்குப் பக்கத்தில் உட்கார்ந்த நரி அதைத் தொட்டுக்கொண்டே இருக்க ஆரம்பித்தது. பின்னும் கொஞ்ச நேரம் ஆயிற்று. நரியினால் ஆசையை அடக்க முடியவில்லை. இட்டிலியைக் கையிலேயே எடுத்து வைத்துக் கொண்டது. 'இதை இப்படியே வாயில் போட்டுக் கொண்டு ஓடிவிடலாமே!’ என்று எண்ணம் உண்டாயிற்று. ஆனாலும் அதற்குத் தைரியம் ஏற்படவில்லை.

‘இதைக் கொஞ்சம் நாக்கில் வைத்துப் பார்க்கலாம்’ என்ற எண்ணம் அடுத்தபடியாகத் தோன்றியது. மெதுவாக நாக்கினல் அதை நக்கிப் பார்த்தது. அப்போது நரிக்கு இட்டிலியை ஒரே விழுங்காக விழுங்கிவிட வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. 'காக்கை வந்தால்...?' என்று எண்ணியது. 'வந்தால் என்ன செய்யும்? நாம் ஒடிப் போய்விடலாம்' என்று அடுத்தபடி ஓர் எண்ணம் வந்தது.

உடனே, துணிந்து இட்டிலியின் ஒரு பாகத்தைக் கடித்துத் தின்றது. அந்தச் சமயத்தில், காக்கை திரும்பி வந்துவிட்டது. வாயில் ஒரு சிறு கிண்ணத்தோடு பறந்து வந்தது. அந்தக் கிண்ணம் நிறைய மிளகாய்ப்பொடி இருந்தது. வரும்போதே அந்தக் காக்கை நரியைப் பார்த்தது. நரி இட்டிலியின் ஒரு பாகத்தைக் கடித்துக் கொண்டிருந்தது. நரி முழுவதையும் விழுங்கி விடப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசயப்_பெண்.pdf/31&oldid=1482023" இலிருந்து மீள்விக்கப்பட்டது