இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தம்பி, கரும்புக்குப் பூ உண்டு, பார்த்திருக்கிறாயா? அது பூத்தால் உடனே வெட்டிவிடுவார்கள். பூ, காய், பழம் என்று மற்றச் செடிகளைப்போலக் கரும்பில் இல்லை. அது பூப்பதோடு நின்றுவிடும். இந்தக் காலத்தில் கரும்புக்குப் பழம் இல்லை. மிக மிகப் பழங்காலத்தில் கரும்புக்குக்கூடப் பழம் இருந்ததாம். கரும்பே இவ்வளவு இனிப்பாக இருக்கும்போது அதன் பழம் எவ்வளவு இனிப்பாக இருந்திருக்கும்! இப்போது அந்தப் பழம் எங்கே போயிற்று என்றால், அது ஒரு கதை. அதைச் சொல்லுகிறேன்; கேள்!
எத்தனையோ காலத்துக்கு முன்பு கரும்பு பூத்துக் காய்த்துப் பழமும் பழுத்ததாம். உலகத்தில் உள்ள