பக்கம்:அதிசயப் பெண்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனி இழந்த கரும்பு

35

சுவைப்பார்கள். கணுவை வெட்டிப் புதைத்து உன்னை வளர்ப்பார்கள். இப்படியாகக் கணுவுக்கு விதையைப் போன்ற பெருமை ஏற்பட்டுவிடும். நீ வருந்தாதே!” என்று கடவுள் ஆறுதல் கூறினார்.

“தங்கள் சித்தம் என் பாக்கியம்” என்று சொல்லி விட்டு, கரும்பு இறைவரிடம் விடை பெறறுக்கொண்டு வந்தது. அதுமுதல் கரும்புக்குப் பழம் இல்லாமற் போய்விட்டது.

“எங்கள் மர நூல் வாத்தியாரைக் கேட்கட்டுமா?” என்று கேட்காதே! அவருக்கு இந்த ரகசியம் தெரியாது. இந்தக் கதையை நீ மட்டும் ரகசியமாக வைத்துக்கொள்!