பக்கம்:அதிசயப் பெண்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இணைந்த அழகு

47

சேர்ந்தால் எப்படி இருக்கும்? உலகமே பிரமித்துப் போகாதா?” என்றது ஒட்டகம்.

“அதற்கு ஏதாவது வழி பண்ணலாம். தெய்வ உபாசனை பண்ணித் தவம் செய்து நாம் இருவரும் சேர்ந்து ஒன்றாகப் பிறக்க முயற்சி செய்வோம்” என்ற காக்கை.

அப்படியே இரண்டும் வேப்பிலையைப் பூஷணமாக அணிந்த மகாமாரியை நோக்கித் தவம் புரிந்தன. பராசக்தி வரம் கொடுத்தாள். அந்த இரண்டு பிராணிகளும் இணைந்து வந்த அவதாரமே இந்த மூர்த்தி!

***

சுலோகப் பொருளைச் சாஸ்திரிகள் சமற்காரமாக விரித்துச் சொல்லி, ‘இந்த மூர்த்தி’ என்று சமையற்காரனைச் சுட்டிக்காட்டியபோது மகாராஜாவுக்கு உண்டான ஆனந்தம் சொல்லி முடியாது. சமையற்காரனுக்குக்கூட உள்ளத்திலே மகிழ்ச்சி உண்டாயிற்று என்பதை அவன் முகத்திலே மலர்ந்த புன்னகை விளக்கியது.