பக்கம்:அதிசயப் பெண்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அதிசயப் பெண்

வித்தியாதரர் என்ற அறிவாளிக்கு வித்தியாவதி என்ற பெண் ஒருத்தி இருந்தாள். அவர் அந்தப் பெண்ணை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார். வித்தியாவதி மிகவும் அழகுடையவள். அவளைப்போன்ற அழகுடையவள் உலகத்திலேயே இரண்டு மூன்று நபர்களே இருப்பார்கள்.

அந்த அழகியைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்று பணக்காரப் பிள்ளைகளும், ராஜகுமாரர்களும் ஆசைப்பட்டார்கள்.

வித்தியாதரரோ சிறந்த அறிவாளி ஒருவனுக்கு அவளை மனம் செய்து வைக்க வேண்டுமென்று விரும்பினார். ஆகையால் யாராவது அவரிடம் வந்து பெண் கேட்டால், “இவளுடைய அழகைக் கண்டு ஏமாந்து போகாதீர்கள். இவளுடைய சுபாவத்தை நான்