6 - அதிசயப் பெண்
எடுத்துச் சொன்னால் நீங்கள் இவளை விரும்பமாட்டீர்கள்’’ என்று சொல்வார். தகப்பனாரே இப்படி வெளிப்படை யாகச் சொன்னால் அதைக் கேட்டவர்கள் துணிந்து எப்படிக் கல்யாணம் செய்துகொள்ள முன்வருவார்கள்.
ஒரு நாள் ஒருவன் வந்தான். பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வந்ததாகச் சொன்னான், வித்தியாதரர் வழக்கம்போல், அவள் சுபாவம் உனக்குப் பிடிக்காதே’ என்றார். “அவள் சுபாவம் என்ன? சொல்லுங்கள்’ என்றான். உடனே அவர், அதை ஏன் அப்பா கேட்கிறாய்? ஒன்றா, இரண்டா? அவளைத் சமையல் செய்யச் சொன்னால் கல்லைப் போட்டுச் சமைப்பாள். நீ அதைப் பொறுத்துக்கொள்வாயா?’’ என்று கேட்டார் வந்தவன் பேசாமல் போய்விட்டான்.
சிலநாள் கழித்து மற்றொருவன் வந்தான் அவனிடம், கல்லைப்போட்டுச் சமைப்பாள். சாப்பிட்டால் ஆதார வஸ்துவை வெளியில் எறிவாள்’ என்றார். அவனும், இவள் அதிசயப் பெண்ணாக இருப்பாள் போல் இருக்கிறது; நமக்கு உபயோகப்பட மாட்டாள்? என்று எண்ணிப் போய்விட்டான்.
மறுபடியும் ஒருவன் வந்தான். அவனிடம் முன்னே சொன்ன இரண்டோடு மற்றொன்றையும் சேர்த்துச் சொன்னார்: -
கல்லைப் போட்டுச் சமைப்பாள். சாப்பிட்டால் ஆதார வஸ்துவை வெளியிலே எறிவாள். வேகாத இலையையும் வெட்டின காயையும் வெந்த கல்லையும் கலந்துகொண்டு வந்து வைப்பாள்.