பக்கம்:அதிசய மின்னணு.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 நாம் வாழும் இந்த உலகில் கோடானுகோடிப் பொருள்கள் உள்ளன. பிராணிகள், மரம் செடி கொடிகள், கல் மண் போன்றவை உலகெங்கும் பல்லாயிரக் கணக்காகச் செறிந்து கிடக்கின்றன. அஃதாவது, உயிருள்ள பொருள் களும் உயிரற்ற பொருள்களும் நிறைந்தது இவ்வுலகம். இவ்வுலகிலுள்ள பொருள்கள் யாவற்றிலும் அணுக்கள் என்பவைதாம் மிகவும் நுண்ணிய பொருள்கள் என்பதாக வியலறிஞர்கள் கருதியிருந்தனர். காலம் செல்லச் மேன்மேலும் புலயிைன. அணுக்களைக் காட்டிலும் நுண்ணிய பொருள்களும் உள்ளன என்று அவர்கட்குத் தெளிவாயிற்று. எதிர் மின்னணு (electron) என்பது மிகச் சிறிய துகள். நாம் கண்ணில்ை காணக்கூடிய மிகச் சிறிய பொருள்கள்ை விடப் பல இலட்சக்கணக்கான அளவுகளில் சிறியது. இதை ஆற்றல் மிக்க நுண் பெருக்கியாலும் (microscope) காண முடியாது. கோடிக்கணக்கான எதிர் மின்னணுக்களை ஒன்று சேர்த்தால்தான் ஒரு குண்டுசியின் தலையளவு இருக்கும். - 1-.gy, Alے