பக்கம்:அதிசய மின்னணு.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 அதிசய மின்னணு கருவி காற்றின் வெப்பநிலை, தராதர ஈரப்பதம், அமுக்கம், காற்றின் நேர் வேகம் முதலியவற்றை அளக்கின்றது. ராடார் என்ற கருவி காலநிலையைத் தெரிவிப்பதில் பெருந்துணை புரிகின்றது. (இதைப் பின்னரும் விளக்கு வோம். அது 200 மைல்களுக்கப்பாலுள்ள பெரும்புயலை யும் (tornado) கண்டறிவதால், அதன் வழியில் வதியும் மக்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை செய்வதற்கு வானிலை அறிவிப்புத்துறையினருக்கு அது மிகவும் துணை யாக வுளளது. மின்னணுமுறையில் இயங்கும் கருவிகளில் அறிவிய லறிஞர்கட்கு மிகவும் சிறப்பாகத் துணைபுரிவது கைகர் எண் கருவி (eேiger counter) என்ற கருவியாகும். இது வாயு நிரம்பிய ஒரு மின்னணுக்குழலைத் தன்னகத்தே கொண் டுள்ளது. அதில் வாயு அணுக்கள் நிரம்பியிருக்கும் பொழுது, மின்னுேட்டமே குழலினுள் இராது. ஆனல் அக்கருவி கதிரியக்கமுள்ள பொருளின் முன்னர் வைக்கப் பெறுங்கால், கதிரியக்கங்கள் வாயு அணுக்களை அயனி யாக்குகின்றன. இதனுல் மின்னணுக்கள் வெளியேற்றப் பெறுகின்றன. இதனுல் மின்னுேட்டம் குழலினுள் பாய் கின்றது. இதனுல் களுக்' என்ற ஓசைகள் உண்டாகி எப்பொழுது கதிரியக்கம் (radioactivity) உள்ளது என்பதை அறிகின்ருேம். கதிரியக்கத்தை அளக்கும் நிலையில் அறிவியலறி ஞர்கள் பாறைகளின் காலங்கள் (அதனுல் பூமியின் காலம்), யுரேனியம் அல்லது எண்ணெய் போன்ற பொருள்களின் இருப்பு, தாவரங்கள் கணிப்பொருள்களைப் பயன்படுத்தும் முறை ஆகிய இன்ைேரன்ன பல செய்திகளைத் தெரிந்து கொள்ளுகின்றனர்.