பக்கம்:அதிசய மின்னணு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதுகாப்புத்துறையின் ஒவ்வொரு பகுதியிலும் மின் னணுவியற் பொறியமைப்புக்கள் செயற்படுகின்றன. போரின் இன்றியமையாமையால் எல்லாவித மின்னணு வியல் அதிசயங்களும் மிக வேகமாக வளர்ச்சியுற்றன. சாதாரணமாக அமைதிக்காலத்தில் இவை வளர்ச்சிபெற்று நிறைவு பெறுவதற்குப் பல்லாண்டுகள் ஆகும். அணுகுண்டு கண்டறியப்பெற்றுப் பயன்படுத்தப்பெற்ற வரையில் மின்னணுவியல் துறையில் போரில் செய்தித் தொடர்பு கொள்ளல், செய்தி அறிதல், கட்டுப்படுத்துதல் ஆகிய மூன்றும் முக்கியப் பணிகளாக இருந்தன. இந்தப் பயன்கள் யாவும் அமைதிக் காலத்திற்கும் முக்கியமான வையே. ஆகவே, போர்க்காலத்தில் பயன்பட்ட மின்னணு வியல் அமைப்புக்கள் யாவும் இன்று அன்ருட வாழ்க்கையில் பயன்படுத்தப்பெறுகின்றன. எல்லாவற்றையும் விடச் செய்தித் தொடர்பு கொள்ளுதல் (communication) தான் முக்கியமான போர்ப்பணியாகும். போரில் ஈடுபட்டு அண்மையிலிருப்போரும் சேய்மையி விருப்போரும் ஒருவரோடொருவர் தொடர்பு கொண்டிருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/107&oldid=735073" இலிருந்து மீள்விக்கப்பட்டது