பக்கம்:அதிசய மின்னணு.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதுகாப்புத் துறையில் } {}} கவனத்துடன் ஆக்கப்பெற்றுத் தாம் செய்யவேண்டிய பணியைச் செவ்வனே ஆற்றுவதற்கேற்றவாறு பொருத்தப் பாடு பெறும் வசதிகளுடன் உள்ளன. மனிதன் சுமந்து செல்லும் வானுெலிக் கருவிகள் பல மைல்கள் தூரம் பல மணி நேரம் எளிதாகச் சுமந்து செல்லுவதற்கேற்ற வாறு இலேசாக இருத்தல் வேண்டும். அந்தச் சிறிய கருவி யமைப்பில் ஒலி பரப்பும் ஏற்பாடும் ஏற்கும் ஏற்பாடும் பொருத்தப்பட்டிருக்கும். இந்தக் கருவியினைக் கொண்டு ஒருவர் எந்நிலையினும் நின்று கொண்டோ, அமர்ந்த நிலையிலோ, படுத்த நிலையிலோ) பல மைல்கள் தூரம் வாஞெலி அலைகளே அனுப்புதல் கூடும். அமைதிக் காலத்தில் இந்த இரு-வழி வானுெலிக் கருவிகள் பெரிதும் பயன்படுகின்றன. நீண்ட காலமாக ஊர்க்காவல்துறை மோட்டார் வண்டியில்தான் இவை வைக்கப் பெற்றிருந்தன. ஆனால் இன்று ஓர் அலுவலகம், ஒரு தொழிற்சாலை, ஓர் ஆற்றல் நிலையம், ஓர் இல்லத்தலைவி ஆகியோர் அனைவரும் தாம் வதியும் நிலப்பரப்பில் மோட்டார் வண்டியில் செல்லும் மக்களுடன் தொடர்பு கொள்ளும் வசதிகள் ஏற்பட்டுள்ளன. ஒரு தொலைபேசிக் கம்பெனி பழுதுபார்க்கும் வண்டியிலுள்ளோரிடம் தொடர்பு கொண்டு எந்த இடத்திற்கு ஆட்கள் தேவை என்று சொல்ல முடியும். இல்லத்தலைவி அலுவலகத்திலிருந்து வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கும் தன் கணவரிடம் பேசி வழியில் வீட்டுக்கு வேண்டிய சில சாமான்களை வாங்கி வருமாறு சொல்லக் கூடும். - புகைவண்டியிலும் இத்தகைய இரு-வழி வானெவிக் கருவிகள் வைக்கப் பெற்றுள்ளன. வண்டியின் பின்னுலுள்ள பெட்டியிலுள்ளோர் வண்டியின் முற்பகுதியிலுள்ளோரிடம்