பக்கம்:அதிசய மின்னணு.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

었 அதிசய மின்னணு எதிர் மின்னணுவை மின்னணு என்றே இந்நூல் முழுவதும் வழங்குவோம். இஃது எதிர் மின்னூட்டத்தைக் கொண்டது. உலகிலுள்ள எல்லாப் பொருள்களும் மின்னணுக் களாலானவை. மேசை, நாற்காலி, கண்ணுடி போன்ற உயிரில்லாத பொருள்களும்; மரம், செடி, கொடி, பிராணிகள் போன்ற உயிருள்ள பொருள்களும் மின்னணுக்களா லானவை. எனவே, பொருள்கள் எந்த வடிவத்திலிருப் பினும் அவை மின்னணுக்களாலானவை என்பதை நாம் அறிதல் வேண்டும். மின்னணுக்கள் உண்மையிலேயே மிக நுண்ணிய துகள்கள் ; அவை நகர்ந்துகொண்டே இருக்கும் தூய்மை யான மின் பொறிகள் ஆகும். நம்முடைய பூமி, செவ்வாய், புதன் போன்ற அண்டங்கள் யாவும் சூரியனைச் சுற்றி இயங்குகின்றன என்பதை நாம் அறிவோம். இங்ங்ணமே, மின்னணுக்களும் ஒரு கதிரவனைச் சுற்றி இயங்குகின்றன. இந்தக் கதிரவன்தான் உட்கரு (nucleus) என்பது. நம் முடைய பூமியைச் சூரியனிடமிருந்து தனியாகப் பிரிக்கவே முடியாது. உட்கரு என்ற சூரியனிடமிருந்து மின்னணுக் களைப் பிரிக்கும் முறையை மக்கள் அறிவதற்குப் பன்னெடுங் காலம் ஆயிற்று. உட்கரு என்பதும் மின்துகள்களா லானதே. இத் துகள்கள் மின்னணுக்களினின்றும் முற்றிலும் வேருனவை. ஒவ்வொரு மின்னணுவும் எதிர் மின்னூட்டம் கொண்டது என்பதை நாம் அறிவோம். ஆனால், உட்கருவில் இருவித மின்துகள்கள் அடங்கியுள்ளன. ஒருவிதத் துகள்கள் நேர் மின்னூட்டம் கொண்டவை ; இவை நேர் மின்னணுக்கள் (protons) என்று வழங்கப்பெறும். மற்ருெரு வகை மின் துகள்களிடம் யாதொரு மின்னூட்டமும் இல்லை; இவற்றை