பாதுகாப்புத் துறையில் 103 அதிசயமுடைய து. இதல்ை விமானங்கள் ஒரு வாளுெலிக் கற்றையினுல் மிகப் பா துகாப்பான முறையில் வந்தடை கின்றன. வேறு விமானப் பிரயாணக் கருவிகள் அழிக்கப் பெற்ருலும், விமானங்கள் இந்த வானுெலிக் கற்றையைப் பின்பற்றிக் கொண்டே இரவினையும் பணியையும் கூடப் பெருட்படுத்தாது நூற்றுக்கணக்கான மைல்களைக் கடந்து தம்முடைய இடங்களுக்கு வந்தடைதல் கூடும். பழக்கப் படாத புதிய இடங்களிலும் அவ்விமானங்களுக்கு அக் கற்ை ற வழிகாட்டும். இன்று வணிக விமானங்கள் இந்தக் கற்றையைப் பயன்படுத்துகின்றன. விமானி தன்னுடைய செவி ஒலிக்கருவிகளினுல் (ear phones) இந்தக் கற்றையை அறிந்து கொள்ளலாம். இந்தக் கற்றை சரியாக ஒலிக்கா விட்டாலும், ஒலிக்காது நின்று போனுலும் தான் கற்றையை விட்டு அப்பால் சென்றுவிட்டதாக விமானி அறிகின்ருன். ராடார் (radar) முதன் முதலில் போர்த்துறைக்காகவே இயற்றப் பெற்றது; தகவல்களைக் கொண்டு வருவதுதான் அதன் முக்கிய வேலையாகும். ராடாரில் மிக உயர்ந்த-அதிர் வுள்ள, மிகக்குறுகிய அலைக் கொத்துக்கள் ஒலியுணர் கொம்புகளால் அனுப்பப்பெறுகின்றன. ராடாரில் அனுப்பும் கருவியமைப்பும் ஏற்கும் கருவியமைப்பும் ஒரே இடத்தில் இருப்பதால், அலைகள் சென்று மீண்டும் தகவல்களைத் தருகின்றன. இக் கருவியை வேறு பல வழிகளில் பயன் படுத்தினுலும், அடிப்படையில் எல்லாம் ஒன்றேயாகும். ராடாரின் அலைகள் மிகத் தீவிரமான சிறுசிறு கொத்துக் களாக அனுப்பப்பெறுகின்றன ; ஒவ்வொரு கொத்திற்கும் இடையே ஒரு நிறுத்தம் (pause) உள்ளது. இந்த நிறுத்தக் காலங்களில் ஏற்கும் கருவி சற்று முன் ல்ை அனுப்பப்பெற்ற கொத்தின் எதிரொலிக்காகக் காத்து நிற்கின்றது. அவ்வாறு திரும்பிவரும் எதிரொலி (echo) தாம் தாக்கும்
பக்கம்:அதிசய மின்னணு.pdf/111
Appearance