பாதுகாப்புத் துறையில் 107 பெருங் கப்பல்கள் யாவும் பல சிறிய கப்பல்களும் தாம் குறுகிய வழிகளிலோ அல்லது பழக்கப்படாத வழிகளிலோ செல்லும்பொழுதும், மூடுபனியினூடே போகும்பொழுதும் தமக்கு வழிகாட்டியாக இருக்கும் பொருட்டு ராடாரைப் பயன்படுத்துகின்றன. கப்பல்கள் தாம் வேறுகப்பல்களுக்கு எவ்வளவு அருகில் உள்ளன என்பதையும், கடற்கரைக்கு எவ்வளவு அருகிலிருக்கின்றன என்பதையும், இருபக்கங் களிலுமுள்ள தீவுகளுக்கு இடையில் தாம் எவ்வளவு தூரத்தி லுள்ளன என்பதையும் ராடரால் அறிந்து கொள்ளமுடி கின்றது. புயல்களைக் காணவும், அவை எவ்வளவு தூரத்தி ந்து எவ்வளவு வேகமாகக் கடற்கரையை நெருங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்து சொல்லவும் வானிலைத்துறையினர் ராடாரைப் பயன்படுத்துகின்றனர்.
படம் 58. கப்பலிலிருந்துகொண்டு நீர் மூழ்கிக் கப்பலின் இருப்பிடத்தை அறிதல் வாஞெலி அலைகள் நீரின் ஊடே பிரயாணம் செய்ய முடியாதாதலின் ராடாரைக் கொண்டு நீர் மூழ்கிக் கப்பலின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியாது. கப்பலில் உள்ள பிரத்தியேகமான பொறியமைப்புக்கள் இதற்குப்