is 8 அதிசய மின்னணு பயன்படுகின்றன. இந்தப் பொறியமைப்புக்கள் ಹಿರಿGಷ ai&èsŻJr (supersonic waves) eigių sisirpsst ; espeu செவி அறிவதற்குரிய அலை நீளங்களைப் பெ ற்றிருக்கவில்லை. அவை மின்சார முறையில் உண்டாக்கப்பெற்றுக் கப்பலுக கடியில் நீரின் ஊடே ஒரு கற்றையாகச் செலுத்தப்பெறுதல் கூடும். ஸ்ட்ரோபோட்ரான் (strobotron) என்ற கருவி இந்த மீஒலிவேகக் கற்றைகளின் அதிர்வு - எண்களைக் கட்டுப் படுத்துகின்றன. இந்த அலைகள் மிகக் குறுகிய கொத்துக்களாக நீரின் ஊடே அனுப்பப்பெறுகின்றன. அவை யாதாவது ஒரு பொருளைத் தாக்கினல் அவை திரும்பவும் கப்பலுக்கு எதி ரொலிக்கின்றன. இந்த மீஒலிவேக அலைகள் சாதாரண ஒலி யலேகளைப் போலவே நீரில் வினுடியொன்றுக்குக் கிட்டத் தட்ட 4000 அடி வீதம் பிரயாணம் செய்வதால், பொருளின் இருப்பிடத்தை உடனே அறிந்து கொள்ள முடிகின்றது. மேற்கூறிய பொறியமைப்பிலிருந்து மின்னணுமுறை யில் எதிரொலிக்கும் கருவியொன்று வளர்ந்துள்ளது. இது ‘கடலைத் துருவிப்பார்க்கும் கருவி (Sea Scanner) என்று வழங்கப்பெறுகின்றது. இது மிக நுட்பமாக இருப்பதால் இத்னைக் கொண்டு கடலில் ஆழ்ந்து விட்ட பெரிதும் சிறிதுமாகிய பொருள்களைக் கண்டறியலாம். இதனைக் கொண்டு ஆழத்தில் செல்லும் மீனும் கண்டறியப்பெறு கின்றது . இந்தக் கருவியினைக்கொண்டு கடலடிகளின் சரியான படத்தைத் தயார் செய்யலாம். அண்மைக் காலம் வரையில் இப்படங்கள் உத்தேசமாகத்தான் தயார் செய்யப்பெற்றன. அகச் சிவப்புக் கதிர்கள் போர்த்துறை இரகசியப் பகுதியில் (war intelligence) பெரும் பங்கு பெறுகின்றன.
பக்கம்:அதிசய மின்னணு.pdf/116
Appearance