பாதுகாப்புத் துறையில் 109. ப்ெரும்பாலான பொருள்கள் அகச் சிவப்புக் கதிர், கானும் ஒளி ஆகியவற்றின் அலைநீளங்களைப் பிரதிபலிக்கின்றன. இந்த அகச் சிவப்புக் கதிர்களின் அலைநீளங்கள் மிகவும் ஆழ்ந்து ஊடுருவிப் பாயக் கூடியவை. பெரிய உலை யொன்றின் கதவின மூடிவிட்டால் நாம் உள்ளே எரியும் நெருப்பின் ஒளியைக் காணமுடியாது. ஏனெனில், நெருப்பிலிருந்து வரும் ஒளியின் அலை நீளங்கள் இரும்பு உலேயை, ஊடுருவி வெளியே வரமுடியாது. ஆணுல், அகச் சிவப்புக் கதிர்களை வெப்பவடிவில் உணரலாம். அவை உலையின் சுவர்களின் ஊடே நேராகப் பிரயாணம் செய்கின் றன. இங்ங்னமே, அகச் சிவப்புக் கதிர்கள் மூடுபனி, மேகங் கள், இருள் ஆகியவற்றைத் துளேத்துச் செல்லக் கூடும். அகச் சிவப்புக் கதிர்களே உணரக்கூடிய பிரத்தியேக மான பிலிம்களைத் தயார்செய்து கொள்ளலாம். விமானத்தில் பல மைல் உயரத்திலிருந்துகொண்டு மேகங்கள், மூடுபனி ஆகியவற்றினையும் துளைத்து வேவுபார்க்கும் படங்களை இந்தப் பிலிம்களைக்கொண்டு தயார் செய்துவிடலாம். ஒவ்வொரு பொருளிலும் கொஞ்சம் வெப்பம் இருப்பதால் ஒவ்வொரு பொருளும் எப்பொழுதும் அகச் சிவப்புக் கதிர் களை வெளிவிட்டுக் கொண்டேயிருக்கும். சாதாரண பிலிம், ஒளிக்கு எதிர்வினை புரிவதைப்போலவே இக்கதிர்களை உண ரக்கூடிய பிலிம் இக்கதிர்களுக்கு எதிர்வினை புரிகின்றன. சில குண்டுவீழ்த்தும் விமானங்கள் அகச் சிவப்புக் கதிர் பொறியமைப்புக்களைக் கொண்டுள்ளன. இவற்றின் உதவி யால் குண்டுகளை வீழ்த்துவோர் இரவிலும் மிக உயரத்தி லிருந்துகொண்டு, தம்முடைய இலக்கினை நன்குஅறியலாம். ஒரு கப்பலும் இத்தகைய பொறியினைக் கொண்டு இரவிலும் மூடுபனியிலும் பகைவரின் கப்பலைக் கண்டறிந்து அதனை
பக்கம்:அதிசய மின்னணு.pdf/117
Appearance