அதிசய மின்னணு 器 கடுநிலை மின்னனுக்கள் (neutrons) என்று வழங்குவர். இந்த இரண்டுவித மின்துகள்களும் உட்கருவில் இறுகிப் பிணைந்து கொண்டுள்ளன. இவ்வாறு பிணைந்து கொண்டுள்ள ஆற்றலுக்கு உலகிலுள்ள எந்த ஆற்றலையும் ஈடு சொல்ல முடியாது. இது புவிஈர்ப்பு விசையைவிட இலட்சக்கணக் கான மடங்கு வலுவுடையது. உட்கருவில் மேற்கூறிய இரண்டுவகைத் துகள்களைத் தவிர இருபதிற்கு மேற்பட்ட வேறு மின்துகள்களும் இருப்பதாக அறிவியலறிஞர்கள் அறிந்துள்ளனர். ஆளுல், அவர்கள் அவற்றைத் தனியாகப் பிரித்து இன்னும் இனங் காணவில்லை. அவற்றின் செயல்களைக்கொண்டே அவற்றின் இருப்பினை மட்டிலும் அறிந்துகொண்டுள்ளனர்.
படம் 1. அணுவின் அமைப்பு 1. நடுநிலை மின்னணு. 2. கேர் மின்னணு. 8. எதிர் மின்னணு. ஓர் உட்கருவும் அதனைச் சுற்றி இயங்கிக்கொண் டிருக்கும் மின்னணுக்களும் சேர்ந்த அமைப்பே அணு (atom) என்பது. சூரியனிடமுள்ள ஈர்ப்பு விசை தன்னைச் சுற்றிலு. முள்ள கோள்களைத் தம்முடைய நிலைகளிலிருந்து விலகாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பதைப் போலவே, அணு