பக்கம்:அதிசய மின்னணு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盖聂桑 அதிசய மின்னணு அமைத்தும் விடலாம். இந்த இசையரங்கின் நிகழ்ச்சியை ஒரு பிரத்தியேகமான துளையிடப்பெற்ற நாடாவில் பதிவு செய்து கொள்ளலாம். நாம் வாழும் இந்த உலகில் எந்த இசைக் கருவிகளாலும் உண்டாக்க முடியாத சுரங்களையும் (potes) சிற்றிசை பேரிசைத் தொகுதிகளையும் நாம் கேட்க லாம். மின்னணு முறையிலமைந்த யாதொரு பொறியமைப் புப் பகுதிகளும் இல்லாத ஒரு புதிய வகைக் குளிர் முறைப் பாதுகாப்புப் பேட்டியினைக் (refrigerator) கொண்டு பனிக்கட்டி வினைத் தயாரிக்கலாம். மின்னணு முறையால் பூசப்பெற்ற பூச்சினைக் கொண்ட கண்ணுடித் தட்டு தன்னுடே நேராகச் செல்லும் எந்த ஒளியையும் பெருக்குகின்றது. நாம் நம் கைக் கெடிகாரம் அளவுள்ள வானுெலிப் பெட்டியை வாங்கி அதனைக் கைக் கடிகாரம் போலவே கட்டிக்கொண்டு வானுெலி நிகழ்ச்சிகளை நுகரலாம். இன்று இராக்கெட்டுகளின் துணையால் மின்னணு முறையிலமைந்த பல்வேறு வகைக் கருவித் தொகுதிகள் விண்வெளிக்கு (space) அனுப்பப்பெறுகின்றன. இக் கருவிகள் பிரத்தியேகமான முறையிலமைக்கப்பெற்ற நிலை யங்களில் காத்துக் கொண்டிருக்கும் அறிவியலறிஞர்கட்குச் சதா தகவல்களை அனுப்பியவண்ணம் உள்ளன. இவ்வாறு ஒர் ஊர்தியினின்றும் வானெலி அலைகளைக் கொண்டு செய்தி களைப் பதிவித்துப் பூமிக்கு அனுப்பப் பெறுவதைமின்னணுப் பதிவு முறை (telemetering) என்று வழங்குவர். இதில் மின் னணுவியல் விண்வெளியில் முன்னதாகச் செல்லும் சாரணர் படைபோல் செயற்படுகின்றது. - இன்று நாம் கிளர்ச்சியூட்டும் உலகில் வாழ்ந்து வரு கின்ருேம். பல வியப்பூட்டும் புத்தமைப்புக்கள் கண்டறியப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/122&oldid=735090" இலிருந்து மீள்விக்கப்பட்டது