பின்னிணைப்பு-1 119. ாைகவோ இருக்கும். இவற்றின் வேதியற் பண்புகள் ஒத்திருப் பினும் அணு-எடைகள் மாறுபடும். கடத்தி (Conductor) : மின்னேட்டம் செல்வதற்குரிய சாதனம். கதிரியக்க ஓரிடத்தான் (Radioactive isotope) : இது நிலையற்ற ஒரிடத்தான். இது சிதைந்தழிந்து கதிர்விட்டுக்கொண்டே யிருக்கும். கம்பி இழை (Filament) : ஒரு மின்னணுக் குழலிலுள்ள மெல் லிய கம்பியாலான எதிர் - மின்வாய் அமைப்பு. இது நேராகச் சூடாக்கப்பெறும். சில சமயம் இது வேருேர் எதிர் மின்வாயைச் சூடாக்கவும் பயன்படுத்தப்பெறும். கம்பி வலே (rேid) : மின்னணுக் குழலின் ஒரு பகுதி. இது நேர் - மின்வாய்க்கும் எதிர் - மின்வாய்க்கும் இடையே செல்லும் மின்னணு அருவியைக் கட்டுப்படுத்தும் ஒர் அமைப்பாகும். காமா-கதிர்கள் (Gamma rays) : நாம் அறிந்த கதிர்களில் மிகக் குறைந்த அலை நீளங்களைக்கொண்டவை. மிக உயர்ந்த மின்னழுத்தமுள்ள புதிர்க்கதிர்களும், ரேடியம் வெளிவிடும் குறுகிய கதிர்களும் காமா-கதிர்களாகும். கைஆர் எண்கருவி (Geiger counter) : இஃது ஒருவகை வாயு நிரம்பிய குழலாகும். இது கதிர்வீச்சினைத் துப்பறிந்து காணும் தன்மையைக் கொண்டது. கோடிகள் (Terminals) : மின்னணுக் குழல்களிலுள்ள கவை முட்கள். இவை குழல்களை மின்சுற்றுக்களுடன் இணைக்கும். சைகிள் (Cycle) : மின் காந்த அலையின் ஒரு முற்றுப்பெற்ற அதிர்வு இது. தடை (Resistance) : ஒரு கடத்தியிலுள்ள அணுக்கள், தனி மின்னணுக்கள் அக்கடத்தியின் வழியாகப் பாய்ந்து செல்வதைத் தடுத்துப் போராட்டம் செய்வது. - தட்டு (Plate) : ஒரு மின்னணுக் குழலில் நேர் மின்னூட்டம் பெற்ற மின்வாய், மின்னணுக்கள் இதனுல் கவரப்பெறும்.
பக்கம்:அதிசய மின்னணு.pdf/126
Appearance