பக்கம்:அதிசய மின்னணு.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

尋 அதிசய மின்னணு வின் உட்கருவிலுள்ள நேர் மின் துகள்கள் எதிர்மின் னுரட்டத்தைக் கொண்ட மின்னணுக்களை மிக வலுவாக இழுத்துப் பிடித்து அவற்றைத் தம் நிலைகளிலிருந்து வழி விலகாமலிருக்கச் செய்கின்றன. ஓர் அணுவின் அமைப்பைப் படம் விளக்குகின்றது. ஆளுல், அணுவினைச் சரியாகப் படத்தால் விளக்குவதற்கு ஒரு புத்தகத்தின் பக்கம் போதாது. உண்மையில் மின்னணுக்கள் இன்னும் பெரிய வட்டங் களில் சுழல்கின்றன. உட்கரு ஒரு துவரையளவு இருந் தால் அணு ஒரு மைல் குறுக்களவுள்ள உருண்டையாக இருக்கும் ! ஓர் அணுவின் எடைமுழுவதும் அதன் உட்கருவி லேயே செறிந்து கிடக்கின்றது. எனவே, அணுவின் எடை என்பது உட்கருவின் எடையே. மின்னணுக்களுக்கு எடையே இல்லை. ஒரு நேர் மின்னணு ஒரு மின்னணுவில் கிட்டத்தட்ட ஆயிரத்தில் ஒரு பங்கு பருமனே இருக்கும். ஆணுல், அதன் எடை மின்னணுவின் எடையைப்போல் 1,840 மடங்கு அதிகம். இருக்கின்றது ! எல்லாப் பொருள்களும் அடிப்படையில் ஒரேவகை யைச் சார்ந்தவை என்று அறிவியலறிஞர்கள் கூறுகின் றனரே, அதன் பொருள் என்ன என்பதைக் காண்போம். எல்லாப் பொருள்களும் அணுக்களாலானவை. அணுக்கள் மின்துகள்களாலானவை; அஃதாவது, உட் கருக்களைச் சுற்றிலும் இயங்கும் மின்னணுக்களைக் கொண்ட அமைப்புக்களாலானவை. எல்லா அணுக்களும் ஒரே மாதிரியாக இருந்தால் இவ், வுலகில் ஒரேவித சடப் பொருள்தான் இருக்கும். ஆளுல், சில அணுக்களின் உட்கருக்களில் அதிகமான நேர்மின் னணுக்களும், சிலவற்றில் குறைவான நேர்மின்னணுக்களும் இருக்கின்றன. இவற்றைச் சுற்றிலுமுள்ள மின்னணுக்