பக்கம்:அதிசய மின்னணு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசய மின்னணு இ களும் பல்வேறுவிதமாக அமைந்துகிடக்கின்றன. உண்மை யாகப் பார்க்குமிடத்து, 92 வகை அணுக்கள் இந்த *-லகிலிருக்கின்றன. அவை யாவும் தனிமங்கள் (elements) என்ற மிக எளிய சடப்பொருள்களாகின்றன. தனிமங்களும் பல வடிவங்களைக் கொண்டுள்ளன. சில வாயுக்கள்; சில திரவங்கள்; மற்றும் சில திடப் பொருள்கள். பரிதியம் (ஹீலியம்) என்ற மிக இலேசான வாயு ஒரு தனிமம். இரும்பு, பொன் ஆகியவையும் தனிமங்களே. ஒரு தனிமத்தின் அணுவிலுள்ள மின்னணுக்களின் எண்ணிக் கையும் நேர்மின்னணுக்களின் எண்ணிக்கையுமே ஒரு தனி மத்திற்கும் பிறிதொரு தனிமத்திற்கும் உள்ள வேற்று மையை அறுதியிடுகின்றன. எனவே, அணுக்கள் யாவும் அடிப்படையில் ஒன்றே என்றும், மின்துகள்களின் எண்ணிக்கையே பல்வேறு அணுக்களின் இருப்பிற்குக் காரணம் என்றும் நாம் அறிகின்ருேம். ஆகவே, உலகில் 92 தனிமங்கள் உள்ளன. மேற்கூறிய 92 தனிமங்கள் ஒன்றும் பலவுமாகத் தம்மொடு தாம் கலந்து கூட்டுப் பொருள்களே (compounds) உண்டாக்குகின்றன. இதனுல்தான் நாம் இவ்வுலகில் பல்வேறு வகைப்பட்ட சடப்பொருள்களைக் காண்கின்ருேம். இக் கருத்தையே தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கணம் "நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற ஐந்து பூதங்களின் சேர்க்கையே உலகம்” என்று வேருெரு விதமாகக் கூறு கின்றது. மரம் செடி கொடிகள், பறவைகள், விலங்குகள், மலைகள் யாறுகள் போன்ற பல பொருள்கள் நிறைந்த தனையே உலகம் என்கின்ருேம். இவை யாவும் மின்னணுக் களாலானவை; இந்த மின்னணுக்கள் யாவும் அவற்றின் உட்கருக்களைச் சுற்றிக்கொண்டே இருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/14&oldid=735100" இலிருந்து மீள்விக்கப்பட்டது