பக்கம்:அதிசய மின்னணு.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசய மின்னணு செயற்படும் நிலையிலுள்ள மின்னணுக்கள் மின்னணு sjir fiċpsù (electronic energy) gr swT வழங்கப்பெறும். ஆல்ை, ஓரணுவில் இதனினும் வேருன ஒர் ஆற்றல் இருக்கின்றது; இந்த ஆற்றல் வேறு விதமாகப் பயன்படுகின்றது. அணு வினைச் சிதைத்து இந்த ஆற்றல் வெளிப்படுத்தப் பெறு கின்றது. இஃது அணுவாற்றல' (atomic energy) sSisi'sU Sl "உட்கருவாற்றல் (nuclear energy) என வழங்கப்பெறு கின்றது. இதுபற்றிய அனைத்தும் அணுவின் கதையால் அறியப்பெறும். மின்னணுக்களைப்பற்றிய அறிவியல் மின்னணுவியல் ஆகும். இங்கு நாம் மின்னணுக்களைக் கட்டுப்படுத்திச் செயற்படச் செய்கின்ருேம். பன்னெடு நாட்களாகச் செய்ய முடியாத வேலைகள் யாவும் மின்னணுக்களால் செய்யப்பெறு கின்றன. மின்னணுவியலால் வான்வெளியில் தொலைவி லுள்ள காட்சிகளைக் காண்கின்ருேம் இருண்ட நள்ளிரவிலும் கனமான எஃகு மூலமும் நம் கண்கள் சில பொருள்களைக் காண்கின்றன. அது பிணி நீக்கும் முறைகளில் பணி செய்கின்றது. போர்களிலும் பெரும் பங்கு கொள்கின்றது. அது தொழிற்சாலைகளிலும், விவசாயப் பண்ணைகளிலும் இல்லங்களிலும் வியத்தகு முறையில் ஏவல் கேட்டு நிற் கின்றது. எதிர்காலத்தில் அது விமானங்களையும் புகை வண்டிகளையும், தானியங்கிகளையும் (automobies) இயக்கி நம் பயணத்தை எளிதாக்கலாம்; நம் இல்லங்களிலும் பல்வேறு சேவைகள் புரியலாம். அஃது ஆயிரம் கைகளை யுடைய ஒரு சேவகன் போல் அனைத்தையும் செய்யும் காலம் மிக அண்மையிலிருக்கின்றது என்பதில் ஐயம் இல்லை.