பக்கம்:அதிசய மின்னணு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ið அதிசய மின்னணு கள் கண்டறிந்தனர். இக் காரணத்தால்தான் உலோகம் மின்னேட்டம் செல்வதற்கு நல்ல கடத்தி (conductor) யாகின்றது. மின்னேட்டத்திற்குக் காரணமான கோடிக் கணக்கான சிறிய மின் துகள்கள் கம்பியின் நெடுக மோதி முட்டியடித்துக் கொண்டு செல்லுகின்றன. ஆதலால்தான் நம் வீட்டிலுள்ள மின்னுற்றலால் இயங்கும் பொருள்கள் யாவும் சுவர்க்குழியில் (wal socket) ஒர் உலோகக் கம்பியால் பொருத்தப்பெறுகின்றன. அறையில் நாம் ஒரு மின் விளக்கு ஒளியில் படித்துக்கொண்டிருக்கின்ருேம் என்று வைத்துக் கொள்வோம். யாராவது ஒருவர் விளக்கினைச் சுவர்க்குழியில் பொருத்தும் கம்பியைப் பிடுங்கி விட்டால், விளக்கு அணைந்து விடும். ஆளுல், அது சுவர்க்குழியின் தன் இருப்பிடத்திலிருந்து விளக்குக் குமிழுக்கு வருவதற். குரிய வழியை இழந்துவிட்டது. எப்பக்கமாக அது தள்ளப் பெறுகின்றதோ அப்பக்கத்தை நோக்கியேதான் அது போக முடியும். அது காற்று வழியாகக் கடந்து விளக்குக் குமிழை அடைதல் முடியாது.

కంు కృత్ర படம் 8. கம்பியிலுள்ள மின்னணுக்கள் எப்பொழுதும் இருக்கும் கிலே ஆளுல், மின்னேட்டத்தைச் சுமந்து செல்லும் தாமிரக் கம்பியிலுள்ள எல்லா மின்னணுக்களும் கம்பியின் ஒரு முனையிலிருந்து அடுத்த முனைக்குப் போவதில்லை! சில புதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/19&oldid=1426819" இலிருந்து மீள்விக்கப்பட்டது