பக்கம்:அதிசய மின்னணு.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலே மின்னணுக்கள் | ". மின்னணுக்கள் மின்னேட்டத்தைத் தரும் பொறியிலிருந்து (plant) வருகின்றன ; ஏனையவை தள்ளப்பெறுகின்றன. ஆனல், கம்பியிலுள்ள மின்னணுக்கள் எப்பொழுதும் அங்கேயே இருக்கின்றன. படத்தில் காட்டியுள்ளபடி இந்த அணுக்கள் எப்பொழுதும் அசைந்து கொண்டும், தம் இருப் பிடங்களை மாற்றிக் கொண்டும், தம் விருப்பப்படி இங்கு மங்கும் போய்க் கொண்டும் இருக்கும். அவற்றைச் செயற். படுத்துவதற்கு முன்னர், அவை யாவும் ஒரே திசையில் பாய்ந்து செல்லுவதற்கு யாதாவது ஒரு செயல் நிகழ்தல் வேண்டும்.

క్రిస్కై గజ్జే * - ஆக படத்தில் காட்டியபடி, அவை கம்பியின் வழியாக ஒன்று. சேர்ந்து தள்ளிக்கொண்டு செல்லும்பொழுது, அவை ஆற்றல் பெறுகின்றன. நாம் பொத்தானை (switch) இயக்கும்பொழுது நாம் தனி மின்னணுக்களை (free electrons) (அஃதாவது உட் கருக்களினின்று கழன்று நிற்கும் மின்னணுக்களை) ஒன்றை யொன்று இடித்துக் கொண்டு ஒரே திசையில் ஓர் அருவி போல் கம்பியில் செல்லுமாறு வல்லந்தம் (force) செய்கின் ருேம். சுவர்க்குழியில் எதிர் மின்னூட்டமுள்ளு-மின்னணுக் கள் மேலும் மேலும் கம்பியினுள் தள்ளப்பெறுகின்றன.