பக்கம்:அதிசய மின்னணு.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அதிசய மின்னணு எண்ணெய், ஆற்றல்நிலையத்தின் உற்பத்திப் பொறியைச் (generator) செயற்படச் செய்கின்றது. உற்பத்திப் பொறி மின்சாரத்தை உண்டாக்கி அதை நாடெங்கும் கம்பிகள் மூல மாகவும் தெருக்களின் கீழுள்ள கேபிள் (cable) மூலமாக நம் வீடுகளுக்கும் அனுப்புகின்றது. நாம் பொத்தானைத் திருப்பும் பொழுது படத்தில் காட்டியுள்ளபடி மின் அழுத்தம் கம்பியின் மூலமாக மின்னணுக்களைத் தள்ளித் தம் வேலை யைச் செய்விக்கின்றது. உலோகக் கம்பியிலுள்ள மின்னணுக்களை அழுத்தம் எவ்வாறு மின் சக்தி யாக்குகின்றது என்பதை நன்கு புரிந்து கொள்ளுவதற்கு அடியிற் கண்ட சோதனை பெரிதும் பயன்படும். குளிர்ந்த பானங்களைப் பருகும் ஒரு பெரிய வைக்கோற் புல் குழலினுள் மிகச் சிறிய சில கூழாங் கற்கள் அல்லது உருண்டைமணிகளைப் (beads) போடுக. இக்குழலே மட்டமாகப் பிடித்துக் கொண்டிருக்கும்பொழுது அவை குழலினுள் இங்குமங்கும் சிறிது நகரலாம்; அல்லது சிறிது வெளியேறலாம். ஆணுல், அவை தரையில் விழும். இப் பொழுது வைக்கோற் குழலுக்கு நேராக ஒரு காகிதத்தை வைத்துக்கொண்டு மற்ருெரு கோடியிலிருந்து பலமாக ஊதுக. கூழாங் கற்கள் வைக்கோற் புல் குழலினின்று மிக விரைந்து வெளிப்பட்டுக் காகிதத்தை ஒரு பக்கமாகத் தள்ளி விடும்; சில கூழாங் கற்கள் காகிதத்தைக் கிழித்துக் கொண்டு செல்லவும் கூடும். அமுக்கத்தைக் கொண்டு வைக்கோலினுள் கூழாங் கற் களை விரைந்து வெளியேறுமாறு வல்லந்தம் செய்ததுடன் அவை காகிதத்தை அப்பால் தள்ளுவதற்கேற்ற வலுவை யும் தந்தாய். இங்ங்னமே, கம்பியிலுள்ள மின்னணுக் களுக்குத் தரும் மின் அழுத்தம் அவற்றை ஒரு மின்னுேட்ட