பக்கம்:அதிசய மின்னணு.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அதிசய மின்னணு பெரும்பாலான மின்னனுக்குழல்கள் வெற்றிடக் குழல் களே (Vacuuam tubes), அஃதாவது அவற்றிலுள்ள காற்று முழுவதும் வெளியேற்றப்படுகின்றது. ஒரு சில மின்னணுக் குழல்களில் சிறிய அளவுகளில் வாயு உள்ளது. ஒருவித மின்னணுக்குழல் படத்தில் காட்டப்பெற்றுள்ளது. இரண்டு காரணங்களால் மின்னணுக்குழல்களினின்று காற்று வெளி யேற்றப் பெறுகின்றது. காற்றணுக்கள் மிகப் பெரிதாக இருப்பதால் மின்னனுக்கள் அவற்றை அடிக்கடி மோதி இறுதியில் அசைவற்றுப் போவது முதற் காரணமாகும், குழலின் உலோகப்பகுதிகள் எவ்வளவு சூடேறினபோதிலும் காற்றின்றி எரியாஎன்பது இரண்டாவது காரணமாகும். மின்விளக்குக் குமிழ் (electric bib) ஒரு வெற்றிடக் குழலாகும். வானுெலிக் குழலும் (radio tube) ஒரு வெற்றிடக் குழலே.

பாடம் 8. மின்விளக்குக் குமிழ் ஒரு மின்விளக்குக் குமிழினுள் இருக்கும் மெல்லிய கம்பி, வளையம்போல் சுருண்டோ அல்லது நடுவில் வளைந்து வளைந்தோ இருக்கும். படத்தில் காட்டப்பெற்றுள்ள மின் குமிழினுள் கம்பி இழை வளையம்போல் சுருண்டு இருக்