பக்கம்:அதிசய மின்னணு.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னணுக் குழல்கள் 2}. குழல் காற்று புகாதவாறு அமைக்கப்பெற்றிருப்பதால் அதனுள் ஒன்றும் எரியாது. இக் குழலில் மின்குற்றல் புகுவதற்கு ஒரு வாயிலும், குழலில் உண்டாகும் புதிய ஆற்றல் வெளிப்படுவதற்கு மற்ருெரு வாயிலும் இருக்க வேண்டும். குழலின் கவசத்தை மேலுறை (envelope) என்று வழங்குவர்.

படம் 10. மின்னணுக்களின் மூலம் (source) ஓர் எதிர்மின்வாயாகவோ அல்லது ஒர் இழையாகவோ இருக்கலாம் எல்லா மின்னணுக் குழல்களும் ஒரு கட்டினைக் (plate) கொண்டிருக்கவேண்டும். இது விடுதலையுடன் உள்ள மின் ன்னுக்களை ஒன்றுசேர்க்கும். இங்குள்ள படத்தில் (படம்-11) நிலத்தினின்று மின்னணுக்கள் தட்டினுள் சேர்வதைக் ாண்க. நடைமுறையில் இத்தட்டு நேர்-மின்வாய் (amode) ன்று வழங்கப்பெறும். நேர்-மின்வாயில்தான் மின் ணுவின் ஆற்றல் உண்மையில் வேலைசெய்யத் தொடங்கு 1றது. இந்த நேர்மின்வாய் பயன்படுத்தப் பெற்றுள்ள றையைப் புரிந்துகொள்ள வேண்டுமாயின் நாம் மின் ணுக்களைப் பற்றியவும் அணுக்களைப் பற்றியவுமான ஒரு க்கிய பண்பினை நன்கு அறிந்துகொள்ளவேண்டும்.