பக்கம்:அதிசய மின்னணு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அதிசய மின்னணு alam), தாமாகத் திறக்கவும் மூடவும் அமைந்த கதவுகளிலும் பயன்படுகின்றன. அசையும் படத்தின் ஒலியமைப்பும் மின் சாரக்கண்ணுல் இயக்கப்பெறுகின்றது. படம் 17. மின்சாரக்கண்' செயற்படும் முறை மூலத்தின் மீது ஒளி பிரகாசிக்கின்றது. எதிர் மின்வாய், - மின்னணுக்கள் கேர் மின்வாய்க்குப் பாய்கின்றன.

வேறு சில மின்னணுக் குழல்கள் மிகச் சிறிய அளவு களில் பிரத்தியேகமான வாயுக்களைக் கொண்டுள்ளன. சூடாக்கப்பெற்ற கம்பி இழையினின்றும் மின்னணுக்கள் தாண்டிக் குதிக்கும்பொழுது அவை குழலிலுள்ள வாயு அணுக்களுடன் மோதி அவற்றின் சில மின்னணுக்களைத் தகர்த்தெறிகின்றன. ஓர் அணு ஓர் மின்னணுவைப் பெற்ருலும் அல்லது இழந்தாலும், நாம் அந்த அணுவை அயனியானதாகக் (ionized) கூறுகின்ருேம். இத்தகைய அணுக்கள், அயனிகள் (ions) என்று வழங்கப்பெறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/41&oldid=735129" இலிருந்து மீள்விக்கப்பட்டது