பக்கம்:அதிசய மின்னணு.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னணுக் குழல்கள் 器 படத்தில் இது காட்டப் பெற்றுள்ளது. ஒரு மின்னணுவை இழந்த அயனிகள் நேர் மின்சாரத்துடனிருக்கும்; ஆகவே, அவைநேர்-மின்வாயினின்றும் அப்பால் விலகித் திரும்பவும் எதிர் மின்சாரமுள்ள எதிர்-மின்வாயை நோக்கி வரும்.

படம் 18. வாயுக் குழல் இயங்கும் முறை இந்த அயனிகள் மின்னணுக்கள் கடந்து செல்லுவதற்கு ஒரு நேர் மின்சாரப் பாலத்தை அமைக்கின்றன. எதிர்-மின் வாயினின்றும் புதிய மின்னணுக்கள் தாண்டிக் குதிக்கும் பொழுது, அவை வாயு அணுக்கள் உள்ள இடங்களில் நிரம்புகின்றன. இந்த இடங்களில் வேறு மின்னணுக்கள் அடித்துப்போகப் பெறுகின்றன ; ஆகுல் முறைப்படி அதிகமான மின்னணுக்கள் மோதப்பெறுகின்றன. வாயு அணுக்களிலுள்ள மின்னணுக்களும் எதிர்-மின்வாயி னின்று வரும் மின்னணுக்களும் ஒன்றுசேர்ந்து ஒரு வன்மையான மின்னுேட்டமாகத் தகட்டை நோக்கிப் பாய் கின்றன. அதிகமான சக்தி தேவைப்படும் தொழிற்சாலை களில் இத்தகைய சில குழல்கள் பயன்படுத்தப்பெறுகின்றன. அலுமினியத்தைக்கொண்டு பாத்திரங்கள் செய்யுமிடங்களி லும் விமானங்கள் செய்யுமிடங்களிலும் வாயுக் குழல்கள் பயன்படுகின்றன. ஒளிரும் விள்க்குகள் (fluorescent lights) *...- ாவும் வாயுக் குழல்களே. கைகர் எண்-கருவியினை இயக்கு வதும் ஒருவகை வாயுக் குழலே. அ.மி.-3