பக்கம்:அதிசய மின்னணு.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னணுக்களைக் கட்டுப்படுத்தும் மின்னணுக்குழல் கள்தாம் பல்வேறு பணிகளைச் செய்துவருகின்றன. இப் பணிகள் மிகக் குறுகிய காலத்தில்-மின்னணுக்கள் குழலுக் குள் குறுக்கே செல்லும் காலத்தில்-செய்யப்பெறுகின்றன. மின்னணுக்களே அடைதல், அவற்றின்வேகத்தை வளர்த்தல் அல்லது குறைத்தல், அவற்றை ஏதாவது ஒரு பக்கமாகத் திருப்பிவிடல், அவற்றைத் தொடக்கி நிறுத்தல் போன்ற பணிகளை இக்குழல்கள் நிறைவேற்றுகின்றன. ஒரு கம்பியி னுள் செல்லும் மின்னணுக்களைக்கொண்டு இச்செயல்களை நிறைவேற்ற முடியாது. கம்பியிலுள்ள மின்னணுக்களை மிகச் சரியாகக் கட்டுப்படுத்தல் மிகச் சிரமமானது ; இயலாதது என்று கூடச் சொல்லலா ம். மின்னேட்டம் செல்லும் கமப்யில மின்னணுக்குழல் உண்மையில் ஓர் இடைவெளி என்று சொல்லலாம். இந்த இடைவெளி காற்று புகாதவாறு ஒரு கண்ணுடி அல்லது உலோகத்தால் மூடி வைக்கப்பெற்றுள்ளது. ஒரு கம்பியில் ஒழுங்காகப் பாய்ந்து செல்லும் மின்னேட்டத்திற்கு மின் னனுக் குழல் ஒரு தடை அல்லது குறுக்கீடு போல் அமைந் துள்ளதுஎன்று சொல்லலாம். இக் குழல் தானுக ஒன்றும்