பக்கம்:அதிசய மின்னணு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னணுக் குழல்களின் பணிகள் 37 மாறுகின்றன. இந்த மின்னுேட்டம் கம்பிகளின் வழியாகச் சென்று, தன்னுடைய பணியைச் செய்து முடித்துத் திரும்பவும் தான் தொடங்கின இடத்திற்கே வந்து விடு கின்றது. இதே மின்னனுக்கள்தாம் புதிய தள்ளுதல்களே மேற்கொண்டு அதே மின்சுற்றில் மீண்டும் மீண்டும் பயன் படுத்தப்பெறுகின்றன. மின்னணுக்குழலை ஒரு பகுதியாகக் கொண்ட ஒரு மின் சுற்றில் மின்ளுேட்டம் எதிர்-மின்வாய் வழியாகக் குழலுக்கு வருகின்றது. தனி மின்னணுக்கள் குழலின் குறுக்கே நேர்மின்வாய்க்குப் போகின்றன. இந்த மின்னேட்டம் ஒரு விதத்தில் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்காக மாற்றம் அடைந்து நேர்-மின்வாயை விட்டு வெளிச்சென்று வேருெரு கம்பியின் மூலம் மின்சுற்றை முற்றுப்பெறச் செய்கின்றது. இந்த மின்னேட்டம் குழவினுள் இருக்கும் பொழுதே தனி நிலையில் தன் பணியை நிறைவேற்று கின்றது; சில சமயம் அது குழலைவிட்டுக் கம்பியை மீண்டும் அடைந்த பிறகு தன்னுடைய பணியைச் செய்கின்றது. மின்னணுக்கள் தம்முடைய பணியைச் செய்யாவிட் டாலும், எதிர்-மின்வாய்-நேர்-மின்வாய்ச் சுற்று முற்றுப் பெறுதல் வேண்டும். குழலில் மின்னணுக்கள் தம்முடைய பணியைச் செய்துவிட்டாலும், அவை உடனே வெளியேற வேண்டும். இதல்ை அவை தமக்குப் பின்னல் எதிர்-மின் வாயினின்றும் வரும் மின்னணுக்களுக்குத் தடையாக இருக்க வேண்டியதில்லை. சில மின்னணுக் குழல்களில் எதிர்-மின்வாய்-நேர்மின்வாய்ச் சுற்றுமட்டிலும் உள்ளது; ஆல்ை, வேறு சில குழல்கள் துணைபுரியும் சுற்றுக்களைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஒர் ஒளிக் குழலுக்குத் துணைபுரியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/46&oldid=735134" இலிருந்து மீள்விக்கப்பட்டது