பக்கம்:அதிசய மின்னணு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அதிசய மின்னணு சுற்று தேவையில்லை. ஏனெனில், மின்னனுக்களை விடுதலை செய்யும் ஒளி குழலின் வெளியிலிருந்து பிரகாசிக்கின்றது: இந்த ஒளி, குழலுடன் எவ்விதத்திலும் தொடர்புகொள்ள வில்லை. எதிர்-மின்வாய் சூடாக்கப்பெறவேண்டுமாயின், இந்தச் சூட்டினைத் தருவதற்கு இரண்டாவது சுற்று ஒன்று. இருக்கவேண்டும். அந்தக் குழலில் கம்பிவலே (grid) ஒன் றிருந்தால், அக் கம்பிவலையிலுள்ள மின்னேட்டத்தைக் கட்டுப்படுத்த மூன்ருவது சுற்று ஒன்று இருக்கவேண்டும். பெரும்பாலான மின்னணுக்குழல்களில் சூடான எதிர்மின்வாய், ஒரு நேர்-மின்வாய், ஒரு கம்பி வலை ஆகிய மூன்றும் இருப்பதால், அவை குறைந்தபட்சம் மூன்று தனித்தனி சுற்றுக்களைக் கொண்டிருக்கவேண்டும். ஒரு மின்னணுக்குழலைப் பார்த்தவுடன் அதில் எத்தனைச் சுற்றுக்கள் இருக்கின்றன என்று நாம் சொல்லிவிடலாம். குழலுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் சிறிய கவர் முட்களைக் (prongs) கொண்டே இதைக் கூறிவிடலாம். இந்தக் கவர் முட்கள் கோடிகள் (terminals) என்று வழங்கப் பெறுகின்றன; அவைதாம் மின்சுற்றுக்களுக்கும் குழலுக்கும் பொருத்துவாயாக அமைகின்றன. ஓர் ஒளிக்குழலில் இரண்டு கோடிகள் உள்ளன. இவற்றுள் ஒன்றன் வழியாக எதிர்-மின்வாய்க்கு மின்னேட்டம் வருகின்றது ; பிறி தொன்றன் வழியாக அது நேர்-மின்வாயினின்றும் வெளி யேறுகின்றது. . சூடான இழையையும் நேர்-மின்வாயையும் கொண்ட குழலில் மூன்று கோடிகள் இருக்கும். இவற்றுள் ஒன்று இழையின் ஒவ்வொரு முனைக்கும் மற்ருென்று நேர்-மின் வாய்க்குமாக அமைந்துள்ளன. இந்த நேர்-மின்வாய், சுற்றினை முற்றுப்பெறச் செய்கின்றது. இதனைப் படத்தில் (படம் 20) காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/47&oldid=735135" இலிருந்து மீள்விக்கப்பட்டது