பக்கம்:அதிசய மின்னணு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாம் பிரணவ மயம்’ என்பது சமயங்கள் உணர்த் தும் உண்மை. இன்றைய உலகிலோ எம்மருங்கும் மின் -னணு வியலாகக் காட்சியளிக்கின்றது. வானுெலிப் பெட்டி, ஒளிரும் குழல் விளக்குகள், தொலைக்காட்சிப் பெட்டி முதலி யவை அனைத்தும் மின்னணுவியல்களின் செயல்களாகும். .பல்பசைக் குழல்கள், ஒவல்டின் டப்பாக்கள், மருந்துக் குழல்கள் முதலியவை அனைத்தும் மின்னணுவியலின் துணையால் அளவுடன் நிரப்பப்பெறுகின்றன. நேற்று நேரு அவர்களும் அமெரிக்கத் தலைவர் கென்னடி, யும் வாஷிங்டனில் சந்தித்துப் பேசிய நிகழ்ச்சி இன்று செய்தித் தாள்களில் படமாக வருகின்றது; பேச்சின் விவரம் செய்திகளாக வருகின்றன. இவை யாவும் எப்படி வெகு விரைவில் இங்கு வருகின்றன? எந்த விமானமும் இவ் வளவு விரைவாக அவற்றை இங்குக் கொணர முடியாது. இவை யாவும் மின்னணுவியலின் அற்புதச் செயல்களாகும். இவ்வியலின் துணையால் எண்ணற்ற அதிசயச் செயல்கள் இன்று நடைபெற்று வருகின்றன ; பல நடைபெறப் போகின்றன. ஒரு சிலவற்றை மட்டிலும் ஈண்டு விளக்கு வோம். . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/59&oldid=735148" இலிருந்து மீள்விக்கப்பட்டது