பக்கம்:அதிசய மின்னணு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம்மருங்கும் மின்னணுவியல் 55. இந்தியாவில் செய்யப்பெற்ற முதல் விமானம் ஒன்று சென்னை மாநகரின் மீது பறக்கின்றதாக வைத்துக் கொள்ளு வோம். அமெரிக்கச் செய்தித்தாள் நிருபர் ஒருவர் அதைப் ஒளிப்படம் எடுக்கின்ருர் ; உடனே அதனை நியூயார்க்கி லுள்ள செய்தித்தாள் அலுவலகத்திற்கு அனுப்ப விழைகின் ருர், அந்தப் படம் ஓர் உருளையின் மீது போர்த்தப்பெற்று அந்த உருளை ஒரு நீண்ட மரையாணி (screw) யின் மீது ஒர் ஒழுங்கான வேகத்துடன் சுழற்றப்பெறுகின்றது. உருளை சுழலும்பொழுது ஒர் ஊசிபோன்ற ஒளிப்படத்தின் குறுக்கே பட்ட வண்ணமிருக்கின்றது. அப்படம் உருளையுடன் மெது வாக மேலும் கீழுமாகத் திரும்பும் பொழுது, ஊசிமுனை படத்தின் ஒவ்வொரு புள்ளியின் மீதும் பிரகாசிக்கின்றது. படத்தின்மீது ஊசிமுனை ஒளிசெய்யும் சுவடுகளை நாம் பார்க்கக் கூடுமாயின் அவை கிராமபோன் பதிவுத் தட்டின்மீது பதிவு செய்யும் ஊசி செய்யும் சுவடுகளைப் போன்றே இருக்கும். ஆணுல், அதில் பள்ளங்கள் (grooves) இரா. படத்தின் பரப்பு முழுவதும் மிக நுண்ணிய கோடுகளால் நிரம்பிவிடும். ஊசிஒளி படம்முழுவதையும் நிரப்புவதால், நாம் அது படத்தைத் துருவிப் பார்க்கின்றது (scans) என்று சொல்லு கின் ருேம். துருவிப் பார்த்தல் என்ற இச் சொல் தொலைக் காட்சியிலும் (television) வழங்கப்பெறுகின்றது. - மேற்குறிப்பிட்ட ஊசி ஒளியைத் தவிர வேறு ஒளி, படத் தின்மீது விழாது. இந்த ஒளி, படத்தின் ஒவ்வொரு புள்ளி யையும் தொடும்பொழுது, இஃது ஒர் ஒளிக் குழலுக்குப் பின் ளுேக்கிப் பிரதிபலிக்குமாறு செய்யப் பெறுகின்றது. படத்தின் மீதுள்ள சாம்பல், கருமை, வெண்மை நிறமுள்ள வெவ்வேறு நிறத் திண்மைகள் வெவ்வேறு அளவுள்ள ஒளிகளைப் பிரதி பலிக்கின்றன. இந்தப் பிரதிபலிப்புக்கள் ஒளிக்குழலின் எதிர்மின்வாயைத் தாக்கும்பொழுது அவை மின்னணுக்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/63&oldid=735153" இலிருந்து மீள்விக்கப்பட்டது