பக்கம்:அதிசய மின்னணு.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அதிசய மின்னணு இக் குழல் மின் அழுத்தத்தை ஒரே சமனுக இருக்கும்படி செய்கின்றது. மின் அழுத்தம் மாறில்ை, மின்னுேட்டம் மாறுபடும்; இதனுல் படமும் மங்கலாகப் போகும், அல்லது உருமாறிப்போகும். - வேறு பயன்கள்: அஞ்சல் நிலையங்களில் கடிதங்களை அவை செல்லும் இடங்களுக்கேற்றவாறு பிரிப்பதிலும், மாற்றுவதிலும், முத்திரையிடுவதிலும் பயன்படும் பொறிகள் மின்னணுக்குழல்களால் இயக்கப் பெறுகின்றன. கப்பலில் ஏற்றப்பெறும் பழவகைகள் புதிர்க்கதிர்களால் சோதிக்கப்பெற்றே அனுப்பப்பெறுகின்றன. இங்ங்னமே தகர டப்பாக்களில் அடைக்கப்பெறும் உணவு வகைகளும் புதிர்க்கதிர்களால் சோதிக்கப்பெற்ற பிறகே அடைக்கப்பெறு: கின்றன. இக்கதிர்கள் அவற்றின் தூய்மையைச் சோதிப்ப துடன் அளவையும் அறுதியிடுகின்றன. நாம் உண்ணும் ரொட்டி, பருகும் பால் முதலியவை களின்மீதும் புற ஊதாக் கதிர்கள் பாய்ச்சப்பெற்று விட்டமின்-D சற்று ஊட்டப் பெறுகின்றது. காலையுணவு கொண்டபிறகு நமக்குப் பொழுதுபோக் குக்காகவும், பல செய்திகளை அறிந்துகொள்வதற்கும் பிறவற்றிற்கும் பயன்படும் வானுெலி (radio), தொலைக் காட்சி (television) ஆகிய சாதனங்களும் மின்னணுவியலைச் சேர்ந்தவையே. எனவே, மின்னணுவியலால் நாம் ஒளி, செய்திகள், தூய்மையான உணவு வகைகள், பொழுது போக்கு நிகழ்ச்சிகள் முதலியவற்றைப் பெறுகின்ருேம். இனி, மின்னணுவியல் பலதுறைகளிலும் பயன்படுவதைச் சற்று விரிவாகக் காண்போம்.