பக்கம்:அதிசய மின்னணு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அதிசய மின்னணு சான் கட்டுப்படுத்துகின்றது. தொழிற்சாலையில் பயன்படும் பெரும்பாலான மின்னணுக்குழல்கள் வேறு குழல்களுடன் குழுக்களாக (beams) வேலைசெய்கின்றன. சில சமயம் ஒரு பணியில் நான்கு அல்லது ஐந்துவகை வேறுபட்ட குழல்கள் இணைந்து செயற்படுகின்றன. இன்று தொழில்துறைகளில் மின்னணு முறையில் சூடாக்குதல் பெரும்பங்கினைப் பெறுகின்றது. மின்னணு முறையில் உணவு உலர்த்தப்பெறுகின்றது. பூச்சுக்களும் tpaints) இனுமல்களும் இம்முறையிஞலேயே உலர்த்தப்பெறு கின்றன. இம்முறையால் பெறும் பெரிய நன்மை விரைவு ஆகும். சாதாரணமாக இருபது மணி நேரத்தில் நன்கு காயும் பூச்சுக்களும் பசைகளும் glues) இம்முறையைக் கையாளுவதால் இருபது நிமிடத்தில் நன்கு உலர்ந்து மேற்கூறிய செயல்கள் யாவும் அகச்சிவப்புக் கதிர்கள் (intra-red rays) எனப்படும் கதிர்களால் நடைபெறுகின் றன. இக் கதிர்களின் அலை நீளம் நாம் கண்ணுல் காணும் ஒளியின் அலை நீளத்தைவிடச் சற்று அதிகமாக இருக்கும். நடைமுறையில் அகச் சிவப்புக் கதிர்கள் இருவகையாகப் பிரித்துப் பேசப்பெறுகின்றன. முதல் வகையின் அலை நீளம் நாம் காணும் ஒளியின் அலை நீளத்தைவிடச் சிறிது அதிகமிருக்கும்; இவை அண்மை (near) அகச் சிவப்புக் கதிர் கள் என வழங்கப்பெறும். மற்ருெரு வகையின் அலைநீளம் இவற்றின் அலைநீளத்தைவிட இன்னும் சற்று அதிகமாக இருக்கும்; இவை சேய்மை fat) அகச் சிவப்புக் கதிர்கள் என வழங்கப்பெறும். இக்கதிர்கள் சாதாரணமாக எல்லா வித வெப்ப உலைகளினின்றும் வரும் வெப்ப அலைகளாகும் மேற்கூறிய கதிர்வகைகளில் முதல் வகையின் அலை நீளம் குறைவாக இருப்பதாலும் அவற்றின் கதிர்வீசல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/70&oldid=735161" இலிருந்து மீள்விக்கப்பட்டது