இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
66 அதிசய மின்னணு தொழிற்சாலைகளில் புதிர்க்கதிர்கள் சிறிய செயல் களையும் நிறைவேற்றுகின்றன. அவை குவளைகளில் (cans) அடைக்கப்பெறும் உணவு வகைகளைச் சோதித்தறிகின்றன. இத்தகைய குவளைகளில் சரியான அளவு உணவுப்பொருள் இல்லாவிட்டாலும், அல்லது பொட்டலங்களில் வேறு குறைகளிருப்பினும் அவற்றை வேறு மின்னணுக் குழல்கள் தள்ளுபடி செய்கின்றன. ஆயினும், இன்று இச்செயல்கள் யாவும் அணுவாற்றலால் நிறைவேற்றப்படுகின்றன.