மின்னணுக் குடும்பத்தில் ஒளிக்குழல்கள் (photo-tubes) ஊர்க்காவலர்கள்போல் பணிபுரிகின்றன. இவை பார்வை யாளர்கள் போலவும், காவலாளிகள் போலவும், துப்பறியும் சேவகர்கள் போலவும் செயலாற்றுகின்றன. தாம் ஒரு பகுதி யாக இருக்கும் மின்சுற்றில் ஒழுங்கினை நிலவச் செய்கின்றன; அவை கணக்கிடல், சரி பார்த்தல், அளத்தல், பதிவு செய்தல் போன்ற செயல்களையும் புரிகின்றன. மின்னணுக் குடும்பத்தில் இவைதாம் மூளைகளாகப் பணி செய்கின்றன எனலாம். எனினும், அவை துணையின்றிச் செயலாற்ற முடியாது. ஓர் ஒளிக்குழல் குறைவான மின்னேட்டத்தை உண்டாக்குவதாலும், இந்த மின்னேட்டம் வேலை செய் வதற்கு முன்னர்ப் பெருக்கப்பெறவேண்டியிருப்பதாலும், ஒளிக்குழல் எப்பொழுதும் மின்னணுக்குழல்களின் குழுவில் ஒரு பகுதியாகவே இருந்து செயற்படுகின்றது. ஓர் ஒளிக்குழல் குளிர்ந்த எதிர்-மின்வாயையும் நேர் மின்வாயையும் கொண்டதும் கம்பிவலை அற்றதுமான ஒரு குழல் என்பதை நாம் அறிவோம். சில சமயம் அது வெற்றிடக்குழலாகவும், சில சமயம் அது வாயு நிரம்பிய குழலாகவும் இருக்கும். இரண்டு வகைகளையும் படங்கள்
பக்கம்:அதிசய மின்னணு.pdf/75
Appearance