பக்கம்:அதிசய மின்னணு.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 அதிசய மின்னணு காட்டுகின்றன. இக்குழலின் எதிர்-மின்வாயினின்றும் மின்னணுக்கள் வெப்பத்தாலோ, அன்றித் தீவிரமான மின் அழுத்தத்தாலோ விடுதலை செய்யப்பெறுவதில்லை; அவை ஒளியினுல் விடுதலை செய்யப்பெறுகின்றன. இந்த ஒளி குழலின் வெளியிலிருந்து வருகின்றது. இந்த ஒளியாற்றல் /T படம் ேே. அ : படம் ேே. ஆ: வெற்றிடக்குழல் வாயு கிரம்பிய குழல் எதிர்-மின்வாயைத் தாக்கி அதனின்றும் மின்னணுக்களை முட்டி மோதித் தள்ளுகின்றன. ஒளியலைகளாக வெளிப் படும் இந்த ஆற்றல் துணுக்குகளைத்தாம் நாம் ஒளித்துகள்கள் (photons) என்று வழங்குகின்ருேம். இந்தக் குழலின் உள்ளே சாதாரணமாக வளைவான ஓர் உலோகத்தகடு இருக்கும்; இதன்மீதுள்ள பூச்சுதான் ஒளித் துகள்களால் தாக்கப்பெறுங்கால் எளிதாக மின்னணுக் களை வெளிவிடும். இப்பூச்சு பெரும்பாலும் தன்மீது திருப்பிவிடப்பெறும் ஒளி அலைகளின் நீளத்தைப்பொறுத்தே இருக்கும். வெவ்வேறு ஒளியுணர்வுள்ள (light-sensitive)