மின்னனுக் காவலர்கள் 73 மின்ளுேட்டம் நின்றதும் எதிர்மின்னேட்டம் துனைக் குழலின் கம்பி வலைச்சுற்றுக்குள் பாய்வதில்லை. இப்பொழுது அக்குழலிலுள்ள மின்னணுக்கள் கம்பி வலையைக் கடந்து சென்று சுற்றினை முற்றுப்பெறச் செய்கின்றன. இக்குழலி -னின்றும் வெளிச் செல்லும் மின்னுேட்டம் திருடன் வருகையை அறிவிக்கும் சாதனத்தை இயக்குகின்றது. மந்திர நீர் ஊற்றுக்களும் (magic fountains) தாமாகத் திறந்து மூடும் கதவுகளும் மேற்கூறியபடியே செயற்படு கின்றன. ஊற்றில் நீர் அருந்துவதற்கு நாம் குனியும் பொழுது ஒளிக்கற்றை உடைந்து மின்னேட்டம் பெருக்கிக் குழலினுள் பாய்கின்றது; இங்ங்னமே, நாம் கதவுகளின் அருகே வரும்பொழுது ஒளிக்கற்றை உடைபட்டு மின்ைேட் டம் பாய்கின்றது. இக்குழல் கதவுகளைத் திறக்கவும் ஊற்றின் நீர் பாயவும் காரணமாக அமைகின்றது. பாண்டவர்களுக்கென இந்திரப் பிரஸ்தத்தில் மயல்ை அமைக்கப்பெற்ற அரண்மனையில் இவைபோன்ற # jo விசித்திர அமைப்புக்கள் அமைக்கப் பெற்றிருந்ததாகப் “பாரதம் கூறுகின்றது. பம்பாய், கல்கத்தா, சென்னை, தில்லி போன்ற பெரிய நகரங்களில் ஒளிக்குழல்கள் பெரும்பாதைகளிலும் தெருக் களிலுமுள்ள மின்விளக்குகள் தாமாக எரியச் செய்வதற்குக் காரணமாகின்றன. சாதாரணமாகப் பகலிலுள்ள சூரியஒளி ஒளிக்குழல்மூலம் மின்னேட்டம் பாயுமாறு செய்கின்றது. மாலை நேரம் வந்ததும் இருள் சூழவே குழலின் மூலம் செல்லும் மின்னேட்டம் நின்று போகின்றது; இப்பொழுது பெருக்கிக்குழலின் மூலம் மின்னுேட்டம் சென்று தெரு விளக்குகளை இயக்குகின்றது. இக்காரணத்தால்தான் பகலில் இருள்சூழ்ந்து மழை பெய்யும்பொழுது, இரவு வராதமுன்பே
பக்கம்:அதிசய மின்னணு.pdf/81
Appearance