பக்கம்:அதிசய மின்னணு.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னணுக் காவலர்கள் 75. விடும். தொடர்ந்துசென்று கொண்டிருக்கும் ஒளிக்கற்றை ஒவ்வொரு தடவையும் உடையும்பொழுது அடைய' ஏற்பட்டு ஒரு பொருள் செல்லுவதை உணர்த்தும். துணைக் குழல் இந்த அடையாளத்தைப்பெருக்கி அதனைக்கொண்டு ஒரு நெம்புகோலை இயங்கச்செய்யும்; அல்லது சென்று கொண்டிருக்கும் பொருள்களைப் பதிவுசெய்ய ஒரு குறியை உண்டாக்கும். படம் 41, ஒளிக்குழல்கள் பொருள்களைக் கணக்கிடுதல் ஒளிக்குழல்கள் ஒளியையும் அதன் வெவ்வேறு அலை நீளங்களையும் நுட்பமாக உணர்வதால் அவை வண்ணங் களை அளவிடுதலிலும், அவற்றை இனம் இனமாகப் பிரிப் பதிலும் பெரிதும் பயன்படுகின்றன. நம்முடைய கண்கள் பத்தாயிரம் விதமான வண்ண வேறுபாடுகளையும் நிறக் கூறுகளையும் (tints) உணரக்கூடும். இஃது ஒரு பெரிய அளவாகத் தோன்றலாம். ஆனால், ஒளிக்குழலுடன் கூடிய மின்னணுவியற்பொறி நுட்பச் சாதனம் இருபது இலட்சம்