மின்னணுவியலால் நம்முடைய உடல்நலம் நன்கு பாதுகாக்கப்பெறுகின்றது. நாம் உண்ணும் உணவு தூய்மையாக உள்ளதா என்பதைச் சதா கவனிக்கவும், அவ்வுணவிற்கு உடல்நலம் பேணும் கதிர்வீசல்களை எற்ற வும், உணவிலிருந்தும் அதன் கொள்கலனிலிருந்தும் நுண்ணிய நோய்ப் புழுக்களை அழிக்கவும் இத்துறை பெரிதும் பயன்படுகின்றது. மேலும், அது நாம் பருகும் நீர், பால் ஆகியவற்றையும், சுவாசிக்கும் காற்றையும் சரி பார்க்கின்றது. நாம் நோய்வாய்ப்பட்டால் நம் நோய் விரைவாகத் தீருவதற்கு மருத்துவருக்கும், மருத்துவ நிலையத்திற்கும் அது பெருந்துணை புரிகின்றது. மின்னணுவியலைச் சார்ந்த புதிர்க்கதிர்கள்தாம் மருத்துவத்துறையில் பெரிதும் பயன் படுபவை. - கதிர்வீசல்களைப்பற்றிப் பேசுங்கால் குறைந்த அலை நீளங்களையுடைய அலைகள் மிகவும் வன்மை வாய்ந்தவை என்று குறிப்பிட்டோம். கண்காணும் ஒளியலைகள் வெப்ப அலைகளைவிடச் சிறியவை ; புற ஊதாக்க் கதிர்களின் அலை
பக்கம்:அதிசய மின்னணு.pdf/86
Appearance