பக்கம்:அதிசய மின்னணு.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல் நலப் பாதுகாப்பில் 79 நீளங்கள் ஒளியலைகளின் அலைநீளங்களைவிடச் சிறியவை: புதிர்க்கதிர்களின் அலைநீளங்கள் புற ஊதாக் கதிர்களின் அலைநீளங்களைவிட மிகச் சிறியவை. எனவே, புதிர்க்கதிர்கள் மிகவும் வன்மைவாய்ந்தவையாகும். - சில புதிர்க்கதிர்கள் கனமான எஃகினையும் துளைத்துச் செல்லவல்லவை. ஆயினும், இவை ரேடியம்விடும் கதிர் களைப்போல் அவ்வளவு குறுகியவை அன்று. காமா-கதிர்கள் (gamma rays) எனப்படும் குறுகிய ரேடியக்கதிர்கள் மிகவும் வன்மை வாய்ந்தவை. ஆகவே, மிகச் சிறிய ரேடியத் துணுக்கினைக் கனமான காரீயப்பெட்டிகளில் வைத்துக் கொண்டு யாதொரு தீங்குமின்றிக் கையாளுகின்றனர். இன்று செயற்கைமுறையில் உற்பத்தி செய்யப்பெறும் கதிரியக்க ஓரிடத்தான்கள் நோய் நீக்குவதில் பெரிதும் பயன்படுகின்றன. ரேடியத்தைவிட இவற்றைக் கட்டுப் படுத்தி ஆள்வது மிகவும் எளிது. புதிர்க்கதிர்களும் மனிதல்ை உண்டாக்கப்பெற்ற வையே. ஆகவே, அவற்றையும் விருப்பப்படி இயக்கி வேண்டியவாறு செலுத்தி ந்ன்கு கட்டுப்படுத்தலாம். அவற்றின் சிறப்பான பண்புகள் நமக்குப் பல்லாற்ரு னும் பயன்படுகின்றன. ஒளி புகாத கெட்டியான திடப் பொருள்களையும் இக்கதிர்கள் ஊடுருவிச்செல்லும். அவை ஒளிரும் பொருள்களை ஒளிவிடுமாறு செய்யும். புதிர்க்கதிர் களைக் கண்ணுல் பார்க்கமுடியாதென்ருலும் அவை ஒளிப் படத் தட்டுக்களைப் பாதிக்கின்றன; அதல்ை தட்டுக்களில் புதிர்க்கதிர்ப்படங்கள் பதிவாகின்றன. சில புதிர்க்கதிர்கள் உயிருள்ள இழையத்தையும் (tissue) அழிக்கின்றன; சில அதனைப்பற்றிப் புதியவகையான உயிருள்ள பொருள்க ளாக்குகின்றன. இன்று தாவரங்களின் விதைகளின்மீது