பக்கம்:அதிசய மின்னணு.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 அதிசய மின்னணு புதிர்க்கதிர்களைப் பாய்ச்சிப் புதியவகைப் பூக்களையும் பெரிய வகைத் தானியங்களையும் உண்டாக்குகின்றனர். புதிர்க்கதிர்கள் உற்பத்தியாகும் குழலைப் புதிர்க் கதிர்க் குழல் (X-ray tube) என்று வழங்குகின்றனர். ஒரு மெல்லிய மின்னணுக்களின் அருவியொன்று குழலின் குறுக்கே சென்று நேர்-மின்வர்யின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மிக வன்மையாகத் தாக்குமாறு செய்யப்பெறுகின்றது. புதிர்க் கதிர்க்குழலின் எதிர்-மின் வாய் ஒரு மெல்லிய கம்பி இழை யால் ஆனது. இதன்மீது ஓர் உலோகக்கிண்ணம் கவிழ்ந் திருக்கின்றது. இந்தக் கிண்ணம் ஒரு கம்பிவலையின் பணியை நிறைவேற்றி மின்னணுக்களை ஒரு மெல்லிய கற்றையாகப் பாயுமாறு செய்கின்றது. ஒரு மின்சாரக் கைவிளக்கின் ஒளிவரும் பகுதியில் கறுப்புக் காகிதத்தை ஒட்டி அதன் நடுவில் ஒரு சிறிய துளையிட்டால், ஒளி எவ்வளவு மெல்லிதாக ஒரு கம்பிபோல் வருமோ, அங்ங்னமே மின் னணுக்கள் ஒரு புதிர்க்கதிர்க் குழலின் குவிமைய எதிர்-மின் வாயினின்றும் மெல்லிய கம்பிபோல் வெளிவருகின்றன. ஒரு புதிர்க் கதிர்க்குழலின் நேர்-மின்வாயில் மின் அழுத்தம் மிக அதிகமாக இருப்பதால், மின்னணுக்கற்றை மிகப் பெருவிசையுடன் அதனுல் சட்டெனக் கவரப்பெறு கின்றது. சாதாரணமாக இந்த நேர்-மின்வாய் தாமிரத் தில்ை செய்யப்பெற்றிருக்கும். மின்னணுக்கற்றை எதிர்மின்வாய் முழுவதையும் தாக்காமல் அதில் இலக்கு (target), எனப்படும் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டிலும் தாக்கு கின்றது. இந்த இலக்கு டங்க்ஸ்டன் எனப்படும் ஒரு பிரத்தியேகமான உலோகத்தால் செய்யப்பெற்றது; டங்க்ஸ் டனின் உருகுவரை (melting point) மிக உயர்ந்தது. (மின் விளக்குகளிலுள்ள கம்பி இழை டங்க்ஸ்டன் என்ற