உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அதிசய மின்னணு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உடல் நலப் பாதுகாப்பில் 81 உலோகத்தாலானது என்பதை ஏற்கெனவே குறிப்பிட் டுள்ளோம்). பின்னத்துத் துப்பாகக் இலக்கு படம் 43. புதிர்க்கதிர்க் குழல் நல்ல புதிர்க்கதிர்களை அடையவேண்டுமானால், மீன் னணுக்கற்றை இலக்கின் ஒரு நுண்ணிய புள்ளியைத் தாக்கவேண்டும். இக்கற்றை ஒரு குறிப்பிட்ட புள்ளியை விடாது தாக்கிக்கொண்டிருந்தால் அப்புள்ளிப்பகுதி உருகச் கூடும். ஆகவே, சில குழல்களில் நேர்-மின்வாயைச் சுழலுமாறு அமைத்து மின்னணுக்கற்றை இலக்கின் பல்வேறு யறு பகுதிகளைத் தாக்குமாறு செய்யப்படுகின்றது: வேறு சில குழல்களில் எண்ணெய் அல்லது நீரை இலக்கின் பின்புறம் சுழலுமாறுசெய்து குளிர்விக்கப் பெறுகின்றது. குழவின் குறுக்கே ஒரு கற்றையாகச் செல்லும் மின் னணுக்கள் இலக்கினால் திடீரென்று நிறுத்தப்பெறுகின் றன; அவை மிக வேகமாகவும் பெருவிசையுடனும் இலக் கினைத் தாக்கும்பொழுது கற்றையிலுள்ள அணுக்கள் நிலை குலைகின்றன. இந்த அணுக்கள் திரும்பவும் தம்முடைய நிலையினை அடையும்பொழுது விடுவிக்கும் ஆற்றல் அலை களைத்தான் நாம் "புதிர்க்கதிர்கள்" என்று வழங்குகின்றோம். நம்முடைய உடலினுள் ஏதாவது ஒரு பகுதியில் என்ன நிகழ்கின்றது என்பதை மருத்துவர் அறியவேண்டு அமி6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/89&oldid=1893324" இலிருந்து மீள்விக்கப்பட்டது