பக்கம்:அதிசய மின்னணு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல் கலப் பாதுகாப்பில் 器 அதிர்வு-எண்ணையுடைய வானுெலி அலைகளை உண்டாக்கு கின்றது என்றும், இந்த அலைகள் தொழிற்றுறைகளில் ஒரு பொருளின் ஊடே மின்ளுேட்டத்தைப் பாய்ச்சி அதன் உட்புறத்திலிருந்து சூடாக்கப் பயன்படுகின்றன என்றும் குறிப்பிட்டோம் அல்ல வா? மருத்துவத்துறையிலும் பிலேயோடிரான் என்ற கருவி இம்மாதிரியே பயன்படுத்தப் பெறுகின்றது. மருத்துவத்துறையில் இதன் பயன் வெப்பம் ஊடுருவல் (diathermy) என்று வழங்கப்பெறுகின்றது. இந்த வானெலி அலைகளைக் கட்டுப்படுத்தக் கூடுமாதலால், தோலைச் சுடாமல் உடலின் எப்பகுதியில் வேண்டுமானுலும் சூட்டினை உண்டாக்கிக்கொள்ளலாம். செயற்கைமுறையில் காய்ச்சலை உண்டாக்கி உடலினுள்ளிருக்கும் தொற்றுக்களை எரித்துவிடலாம். வேறு அலைகளும் மின்னணுவியல் மருத்துவத்தில் பயன்படுகின்றன. சில நிமிட நேரத்தில் புற ஊதாக் கதிர்கள் கதிரவன் தரும் நன்மைகளையெல்லாம் தருதல் கூடும். மருந்துச் சரக்குகள், மாத்திரைகள், அறுவை மருத்துவத்தில் பயன்படும் துணிகள் முதலியவற்றைப் பொட்டலங்களாக்குவதில் புற ஊதாக் கதிர்கள் முக்கிய பங்கினைப் பெறுகின்றன. தொற்றுப்புழுக்களைக் கொல்லும் புற ஊதாக்கதிர் விளக்குகள் பாதரச ஆவியால் நிரப்பப் பெறுகின்றன. குழலினுள் பாய்ந்து செல்லும் மின்னனுக் கள் வாயு அணுக்களை முட்டி மோதும்பொழுது அந்த வாயு அணுக்கள் புற ஊதாக் கதிர்களை வெளிவிடுகின் றன. ஓர் ஒளிர்விடும் விளக்கில் முன்னும் பின்னுமாகச் செல்லும் இரு திசை மின்னுேட்டத்தைப்போலவே இவற். நிலும் மின்னேட்டம் செல்லுகின்றது. விளக்குகளின் உறைகளின் உட்புறம் ஒளிரும் பொடிகளால் பூசப்பெறு வதற்குப் பதிலாக அவை புற ஊதாக்கதிர்கள் ஊடுருவிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/91&oldid=735184" இலிருந்து மீள்விக்கப்பட்டது