பக்கம்:அதிசய மின்னணு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8 அதிசய மின்னணு ஒரு துண் பெருக்கி படத்தில், காட்டப் பெற்றுள்ளது. இத்தகைய நுண் பெருக்கியைக் கொண்டு தாம் பார்க்க விரும்பும் பல பொருள்களைப் பார்த்து ஆராய முடியாமல் ஒரு சங்கடம் அறிவியலறிஞர்களைத் தடைசெய்தது. இந்திச் சங்கடம் யாதென்பதை அறிந்து கொள்ள வேண்டுமாயின், நாம் ஒளியலைகளைப்பற்றிய சில கருத்துக்களை ஈண்டுச் சிந்திக்க வேண்டும். * நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளும் ஒளியலைகளின் ஒளித்திருப்பம் (reflection) என்பதை நினைவு கூர்தல் வேண்டும். வேறுசில அலைகளை நோக்க, ஒளியலைகள் மிகச் குறுகியவை அன்று. அறிவியலறிஞர்கள் ஆராய விரும்பும் ஒரு சில பொருள்கள் உண்மையில் அந்த ஒளி யலைகளைவிட மிகச் சிறியவைகளாக உள்ள்ன. இந்த ஒளி யலைகளில் ஆயிரக்கணக்கானவைகளை ஒன்று சேர்த்தாலும் அவை ஓரங்குல நீளம்கூட இருக்கா; இதை எண்ணிப் பார்ப்பது கூட மிகவும் கடினமானது. ஆனல், எண்ணற்ற நோய்க்கிருமிகள் இந்த ஒளியலைகளைவிட மிகவும் சிறியன வாக உள்ளன. அவற்றை அறிவியலறிஞர்கள் ஒருநாளும் பார்த்ததே இல்லை. - மேலும், அறிவியலறளுசகள பலவேறு சடப்பொருள் களில் அனுத்திரளைகளின் (molecules) கோலங்கள் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்பதையும் அறிய விழைந்தனர். இந்த முறையில் அத்தகைய சடப்பொருள்களின் வகை களின் அமைப்பைப்பற்றி ஒருசில குறிப்புக்களை (clues) அறிதல் கூடும். இந்த அணுத்திரளைகளும் சில சமயம் ஒன்றிநிற்கும் ஒருசில அணுக்களாக இருப்பதால் அவற் றைக் கண்ணுல் பார்க்க முடிவதில்லை. இவற்றுட்ன் ஒப்பிட்டு நோக்க ஒளியலைகள் மிகப் பெரியவைகளாக உள்ளன. ஒளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/96&oldid=735189" இலிருந்து மீள்விக்கப்பட்டது