பக்கம்:அத்தை மகள்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8அவள் அவனை அடிக்க விரைந்தாள். அவன் கத்திக்கொண்டே ஓடினான். அவளும் துரத்தியபடி பின்சென்றாள். -

'பெரிய வாயாடி' என்றாள் தாய்.

'சிறுசு தானே. வயசு வந்தால் தானாகவே சரியாகி, தங்கக் கம்பியாகி விடுவாள்' என்று 'பூச்சுமானம்' செய்தாள் சித்தி.

அது அந்தக் காலம்!

'அந்தக் காலம்' என்றால் என்ன கணக்கில் அடங்காத ஆண்டுகளா ஒடி மறைந்து விட்டன? இல்லையே ஆறேழு வருஷங்கள்----அதிகம் போனால், எட்டுவருஷம்---போயிருக்கும்.

எட்டு வருஷங்கள் என்றாலும் அற்ப மல்ல. ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனையோ மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது காலம். ரத்னம் எவ்வளவு மாறிப் போனாள், பாவாடையை அவிழ்த்து அவிழ்த்துக் கட்டிக்கொண்டு---மறுபடியும் அவிழ்த்து, சரியாகக் கட்டாமல் நாடாவைக் கையிலே பிடித்துக்கொண்டு எதையாவது கத்தியபடி நடுத்தெருவிலே 'கழுதைக் கூத்து' பண்ணத் தயங்காத வாயாடிச் சிறுமி தானா இன்றையப் பேசமடந்தையாக---ஆளைக்கண்ட உடனேயே அடுப்பங்கரையில் போய் பம்மும் பொம்மையாக---வளர்ந்திருப்பது? நம்ப முடியவில்லை.

சுந்தரத்தால் நம்ப முடியவில்லை தான். எட்டு வருஷங்களுக்குப் பிறகு அத்தை வீட்டுக்கு வந்திருந்தவன் இதை எதிர் பார்க்கவில்லை. பரட்டைத் தலையும் பாவாடையும் கூப்பாடுமாகக் குதியாட்டம் போட்டுத் திரிந்த சிறுமி 'கோவேறு கழுதையாக' வளர்ந்திருக்கும் என்று தான் எண்ணினான். அதனால் முதன் முதலில் அவன் பார்வையில் பட்டு பளிச்செனப் பாய்ந்து மறைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/10&oldid=975918" இருந்து மீள்விக்கப்பட்டது